நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மற்றும் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் மூல வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்!

(மீன்பாடும் தேனாடான்)

2004 ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர் கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத் தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தியிருந்தது.
ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே மார்ச் மாதம் 4ம் திகதி புலிகளுக்குள் கருணாம்மானின் தலைமையில் கிழக்கு பிளவு உருவானது. பிளவுக்கு முன்பு வரை மட்டகளப்பு -அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதியாக இருந்த கருணாம்மானே புலிகளின் சார்பில் இந்த வேட்பாளர்களை தேர்வு செய்திருந்த படியால் வன்னி புலிகள் மட்டகளப்பு வேட்பாளர்கள் பிளவின் பின்னர் கருணாம்மானுக்கு சார்பு நிலை எடுப்பார் என அஞ்சி வெற்றி வாய்ப்பை பெறக் கூடிய வேட்பாளர்கள் அனைவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டனர்.
இராஜன் சத்திய மூர்த்தி தேர்தலுக்கு முன்பே கொல்லப்பட்டார். அவரது புதைக்கப்பட்ட உடலைக்கூட தோண்டியெடுத்து வன்னி புலிகள் சின்னா பின்னப்படுத்தினர். கனகசபை என்னும் வேட்பாளரை கொலை செய்ய தயாரான புலிகளை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றியடைந்த கிங்ஸ்லி இராசநாயகம் வன்னி புலிகளால் கொல்லப்பட்டார். அவரை இராஜினாமா செய்ய வைத்த பின்னர் அவரை கொன்றனர். அந்த இடத்துக்கே அரியநேந்திரனை புலிகள் நியமித்தனர். அதற்கு பின்னர் அத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டார்.

(“கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபை முதல்வர்! எதிர்க்கட்சி தலைவர்! மோதல்+காதல்

(மாதவன் சஞ்சயன்)

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என ஒருவன் கூறியது போல் பதில் கூறுகிறார் வட முதல்வர் என, எதிர்க்கட்சி தலைவர் குறை கூறும் நிலையில் இருக்கிறது முதல்வர் செயல். அண்மையில் ஆங்கில இணையத்தில் வடக்கு மாகாண சபையின் செயல்திறன் இன்மை பற்றி அறிக்கை வெளியிட்ட திரு தவராசா தான் முன்வைத்த மேலே உள்ள கேள்விகளை முதல்வரிடம் கேட்ட போது, முதல்வர் ஐநா வின் வதிவிட பிரதிநிதியை சாடினாரே தவிர, கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலை அவர் தரவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பற்றி அறிய ஏற்கனவே உள்ளே நடந்தவை என்ன என விசாரித்தபோது முதல்வரின் செயலாமை பற்றி தெரிய வந்தது. ஆமை புகுந்தவீடு உருப்பாடாது என்பர். வட மாகாண சபையில் இயலாமை, முயலாமை, செயலாமை என பல ஆமைகள் புகுந்து விட்டன.

(“வட மாகாண சபை முதல்வர்! எதிர்க்கட்சி தலைவர்! மோதல்+காதல்” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்தார் என்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

LTTE இன் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவி காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் அரசியல் பிரிவு முன்னாள் பொறுப்பாளர்  தமிழினி என்றழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

எல்லைகளற்ற உலகம் ??

(சுகு-ஸ்ரீதரன்)

உலகின் பெருமளவு யுத்தங்கள் அகதிகள் நெருக்கடிகளுக்கு வடஅமெரிக்கா ஐரோப்பாவின் பலம் பொருந்திய நாடுகள் பிரதானமாக பொறுப்பேற்க வேண்டும். எல்லைகள மூடிவிட்டு தனிக்கிரகமாக ஐரோப்பா வட அமெரிக்கா இருந்த விட முடியாது. மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ேற்கொண்ட விபரீத விளையாட்டின் பிரசவம் தான் ஐரோப்பாவில் வழிநெடுக அகதிகள் குவிந்திருப்பது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் இதனைப் பொருத்தி பார்க்கலாம். தேசிய இனப்பிரச்சனையினதும் சர்வதேச ஆயுத வியாபாரத்தின் ஒரு ஒரு பகுதியாகவும் இலங்கையின் வடக்கு கிழக்கை வமையமாக கொண்ட யுத்தம் கொழுப்பு மொரட்டுவ தொடக்கம் வத்தளை யாஎல நீர் கொழும்பு ஈறாக தமிழர்களை நெரிசலாக கொண்ட பிரதேசங்களாக மாற்றின.

(“எல்லைகளற்ற உலகம் ??” தொடர்ந்து வாசிக்க…)

அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன்……?

 

உரும்பிராய் இந்துக் கல்லூரி பின்னால் மேற்கே சட்டத்தரணி தியாகலிங்கத்தின் வீடு உள்ளது. தியாகலிங்கம் குடும்பத்தினர் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களின் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் நீண்ட காலமாக வசித்து வந்தார். அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அந்த வளவிற்குள்தான் குடியிருந்தனர்.

(“அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன்……?” தொடர்ந்து வாசிக்க…)

இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன. பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

(“இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது” தொடர்ந்து வாசிக்க…)