யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் மற்றும் டிசேட் அணிந்து வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தாடியுடன் விரிவுரைகளுக்கு வருவதும் தடை செய்யப்படுவதாகவும், மாணவிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புடவை அணிந்து விரிவுரைகளுக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன், இவை பேரவையில் எடுக்கப்பட்ட முடிவாகவும் கூறப்பட்டது.
(“புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்!” தொடர்ந்து வாசிக்க…)