தீவிர அரசியலில் 55 ஆண்டுகளுக்குமேல் ஈடுபட்டிருக்கும் நான் தமிழ் மக்கள் மத்தியில் எனது செயற்பாடுகள் பற்றி எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். 1960ம் ஆண்டு தொடக்கம் உள்ளுராட்சி மன்றங்கள் பாராளுமன்றம் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட்டு வந்திருக்கின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சம்பந்தமாக விசேடமாக இன்று மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பெரும் சாதனைகளை புரியலாமென கருதி நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன் இயக்கத்துக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் பற்றி விபரிக்க தகுந்தநேரம் இதுவல்ல. இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தெரியாமலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டு எதுவித பொறுப்பும் வழங்கப்படாது ஒதுக்கப்பட்டிருந்தேன். அதன் பின்னர் இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் சில புறந்தள்ளப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபிரதிநிதிகளாக காலத்துக்காலம் ஒரு கட்சி ஏனையவற்றை புறந்தள்ளி செயற்படுகின்றது. இதன் விளைவாக இன்று பெயரளவில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குகின்றதேயொழிய சில சந்தர்ப்பத்தில் ஒரு கட்சி மட்டும் தனியாகவும், வேறு சந்தர்ப்பத்தில் இரு கட்சி தலைவர்கள் இணைந்தும், பெருமளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அணியின் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளமையால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்டா இல்லையா? என்ற நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. இக்கட்டத்தில்தான் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்க உத்தேசித்து நல்லதொரு தலைமையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருந்தேன். சிலர் திட்டமிட்டு இம்முயற்சியை தோல்வியடைய செய்துள்ளனர். ஆனால் இன்றைய அவசர சூழ்நிலையை உணர்ந்து வட மாகாண முதலமைச்சரின் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் முன்னோடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைகூட விட்டுக்கொடுக்க தயாராக இருந்தேன்.
(“அரசியல் இன்றேல் தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு என்ன? – TULF” தொடர்ந்து வாசிக்க…)