தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்!

கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் செவ்வாய்க்கிழமை (23-02-2016) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தாம் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றோம் எனவும், உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் திங்கள் (22-02-2016) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலையின் ‘ஜே’ பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவில் உள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் 23-02-2016 செவ்வாய்க்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

 

இது தொடர்பான அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்புடன் இணையத் தயார் ஈரோஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணி எனப்படும் ஈரோஸ் கட்சியின் தலைவர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், இன்றைய சூழலில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் உண்மையான அடையாளாம். அதன் மூலமாகத்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற முடியும். அதனால்தான் ஈரோஸ் மறுசீரமைப்பு மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியில் பயணத்தை மேற்கொளவதென முடிவு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் பேரவை அல்ல எந்தப் பேரவையாலும் அழிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு சட்டத்தரணியும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் ஆணையாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சி ஒரு சட்டவிரோத ஆயுதக் குழு என்று இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

(“ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!” தொடர்ந்து வாசிக்க…)

தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது!

தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைஇ எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர். நல்லாட்சி அரசாங்கம் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்’ வரவில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல மனித உரிமை குறித்த விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அனுசரணையும் வழங்கியது. தமது வாக்குறுதிகள் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்’ அல்ல என பிரகடனப்படுத்திய சொற் பிரயோகங்களின் சத்தம் அடங்குவதற்குள்ளேயே இலங்கைத் தரப்பிலிருந்து தனது பிரகடனத்தையே தகர்த்தெறியும் வார்த்தைப் பிரயோகங்களை உதிர்க்கத் தொடங்கி விட்டது. மனித உரிமை மீறல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொள்வதை இலக்காகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினரின் செயற்பாடுகளும் உள்ளன.

(“தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது!” தொடர்ந்து வாசிக்க…)

வேலையற்ற பட்டதாரிகள்! அரசின் தீர்வு?

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப் போராட்டங்களின் தொடர்சியாக கடந்த வாரம் கொழும்பில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரசாங்கத்திடம் முன்வைத்த காலக்கெடு முடிவடைந்த நிலையிலேயே இவ் ஆர்ப்பட்டத்தினை நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி முன்னேற முற்பட்ட வேளையில் அங்கு பெரும் களோபரமும் இடம்பெற்றது. இவ்வாறாக வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் நாட்டில் தொடர்ச்சியாக அதாவது ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஓர் முறையேனும் பல்கலைக் கழகங்களில் இருந்து வெளியேறிய பட்டதாரிகள் வீதிக்கு இறங்கி வேலை வாய்ப்புக்களுக்காக போராட வேண்டியுள்ளது.

(“வேலையற்ற பட்டதாரிகள்! அரசின் தீர்வு?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 5)

இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 5)” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் நாட்டில் உருவாகும் புதிய சட்டம் தமிழர்களையும் பாதிக்குமா….?

சுவிட்சர்லாந்தில் நீண்ட காலமாக வாழும், வதிவிட அனுமதி பெற்ற தமிழர்களையும், பிற வெளிநாட்டவர்களையும், இலகுவாக நாடுகடத்துவதற்கான சட்டத் திருத்தம் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. பெப் 28 நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், சட்டத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால், அது அங்கு வாழும் தமிழர்களையும் பாதிக்கும். இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வாழும் தவராஜா சண்முகம் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்:

(“சுவிஸ் நாட்டில் உருவாகும் புதிய சட்டம் தமிழர்களையும் பாதிக்குமா….?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!

வலிகாம கிணறுகளில் கழிவு எண்ணெய்! வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!

 

வலிகாமப் பகுதியின் கிணறுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலந்து, இரண்டு லட்சம் பேர்வரையானவர்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சரும், அமைச்சர் ஐங்கரநேசனும், காலத்திற்குக் காலம் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளதுடன், ஒரு ”நிபுணர் குழு” இனையும் அமைத்து, அந்த நிபுணர் குழுவானது ஒரு அறிக்கையையும் அண்மைக் காலத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கிணற்று நீரில் ஆபத்தான BTEX இல்லை எனவும், மலக் கழிவுகள், நைற்றேற்றும் தான் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது!

(“வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம்!

மத்திய அரசாங்கத்துடன் வடக்கு மாகாணசபை, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இந்தியாவும் மேற்குலகமும், அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபை தனித்துச் செயற்படுவதை விரும்பத்தக்க விடயமல்ல என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் எடுத்துக் கூறியுள்ளனர். அண்மைக்காலங்களில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே, வடக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளனர்.

(“வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

நான் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமைபடுகின்றேன்

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நீங்கள் ஏறத்தாழ 72 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?’’

(“நான் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமைபடுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)