காந்தியின் வெள்ளையனே வெளியேறு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட ஜே ஆர், தான் ஆற்றிய உரையில் இலங்கை பல மொழி பேசும் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்படல் வேண்டும் என்ற தன் நிலைப்பட்டை தெரிவித்தார். பின்பு அநகாரிக தர்மபாலாவின் சிந்தனை வழியில் சிங்களம் தேசிய மொழியாக வேண்டும் என, சட்டசபையில் கூறி தன் அரசியல் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். அதேபோல பிரித்தானியாவில் மேற்படிப்பு படித்து நாடு திரும்பிய பண்டாரநாயக்க, இலங்கை மூன்று சமஸ்டி ராச்சியங்களாக மாற்றம்பெற வேண்டும் என கூறினார். ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் தமிழரசு கட்சி கோரிய சமஸ்ட்சிக்கு ஒப்பமிட்டு பின்பு அதனை கிழித்து எறிந்தார்.
Author: ஆசிரியர்
மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவரின் வருகை இலங்கையில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஹூசைனின் இலங்கை விஜயத்துக்கு எதிராக மஹிந்த தரப்பினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவருடைய வருகையை எதிர்பார்த்துள்ளனர்.
(“மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
“இலங்கை இந்தியா இடையேயான தரைப் பாலத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை”
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் இன்று மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டன. இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை, விஜயம் செய்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் இலங்கை வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உட்டபட இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை மீள்புனரமைப்பு செய்தல் ஆகிய இரண்டு ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டன.
சுன்னாகம் நீர் மாசு, பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாண அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளருக்கும் மல்லாகம் நீதவானால் இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.. 2014 ஆம் ஆண்டு உடுவில் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரேதச வைத்திய அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுன்னாகம் பகுதியில் உள்ள மின் நிலையத்தின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு மல்லாகம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தனின் கண்ணீரால் சங்கரி கடுப்பில்…
சம்பந்தனுக்கு கண்ணீர், மக்களிற்கு இரத்தம் வடிகிறது!!! எனும் தலைப்பில் வீ.ஆனந்தசங்கரியினால் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது, இதில் அரசியல் கைதிகள், முன்னால் போராளிகள், கணவனை இழந்த இளம் பெண்கள் பொன்றோரின் நிலையை அறிந்து, அவர்களிற்கு கிடைக்க வேண்டியதை பெற்று கொடுக்க அஎதிர் கட்சி தலைவராக ஏதாவது முயன்றுள்ளீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திரு.சம்மந்தன் ஐயா அவர்கள் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட வேளை கண்கள் கனிந்து கண்ணீர் முட்டியதாக வந்த செய்தி எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எமது பிள்ளைகள் சிறையில் விடுதலை பற்றிய கனவு கண்டு கொண்டு பல தடைவ ஏமாற்றமடைந்து விரக்தியுடன் இருக்கும் அரசியல்கைதிகளை நினைத்து வராத கண்ணீர், காணாமல் போன உறவுகளின் நிலையறியாது, நாளும் பொழுதும் கண்ணீருடன்வாழும் ஆயிரமாயிரம் தாய்மார்கள் கதறி அழும்போது வராத கண்ணீர், யுத்தத்தின் இறுதி நாட்களில் அம்மக்களை விடுவிக்க வந்த சந்தர்ப்பத்தை நளுவ விட்டுவிட்டடோம் என்ற குற்ற உணர்வில் வரவைக்காத போது இன்று மட்டும் தேசிய கீதம் தமிழில் பாடபட்டபோது எப்படி கண்கள் பனித்தன என்பது ஆச்சரியமானதே.
(“சம்பந்தனின் கண்ணீரால் சங்கரி கடுப்பில்…” தொடர்ந்து வாசிக்க…)
சுதந்திர தினத்தோடு மீண்டும் அழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா?
இலங்கை என்ற சிறிய தீவை பிரித்தானிய காலனியாதிக்கம் விடுதலை செய்து தனது உள்ளூர் முகவர்களிடம் ஆள்வதற்காக ஒப்படைத்த நாளான பெப்ரவரி 4ம் திகதியை இலங்கையின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்கின்றவர்களுக்கும் இந்த நாள் சுதந்திர நாள் அல்ல. இலங்கையை நேரடியாக ஆட்சிசெய்த பிரித்தானியா தமது முகவர்களூடாக அதனை ஆள்வதற்குரிய அரசை ஏற்படுத்திய சுதந்திர தினத்திலிருந்து இலங்கையில் ஒரு சுழற்சி போல இரத்தம் ஆறாகப் பாய ஆரம்பித்தது. தொடர்ச்சியாகப் பத்தாண்டுகள் இலங்கையில் ஆயுதப் போராட்டமற்ற சூழல் காணப்பட்டதில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வன்முறைகளை இனக்கலவரங்கள் என அழைத்துக்கொண்டனர். தெற்கிலிருந்து எழுந்த ஜே.வி.பி இன் ஆயுதப் போராட்டங்களையும், தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் பயங்கரவாதம் என அழைத்தனர். இந்த இரண்டு போராட்டங்களையும் அழித்து ஆயிரமாயிரமாய் மக்களை கொன்று குவிப்பதற்கு பிரித்தானிய அரசு நேரடிப் பங்களிப்பைச் செலுத்தியது. தனது ஆலோசகர்களை இலங்கைக்கு அனுப்பியது. ஆட்கொல்லி ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கிற்று.
(“சுதந்திர தினத்தோடு மீண்டும் அழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)
விக்கிலீக்ஸ் நிறுவனர் சட்டத்துக்கு புறம்பாக பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்டார்! – ஐ நா செயற்குழு
விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசான்ஜ் சட்ட விதிகளுக்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் 5 நீதிபதிகள் சில மணிநேரங்களுக்கு முன் இன்று (பெப்ரவரி 5 2016) அறிவித்து உள்ளது. யூலியன் அசான்ஜ் இன் சுயாதீன நடமாட்டத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. யூலியன் அசான்ஜ் யை அமெரிக்கா உட்பட பிரித்தானியா சுவீடன் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்க முற்பட்ட போது 2012 ம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள எக்குடோரியன் உயர்ஸ்தானிகர் இல்லத்தில் யூலியன் அசான்ஜ் தஞ்சமடைந்தார். தற்போது ஐநா வின் சட்டத்துக்கு புறம்பான தடுத்து வைப்பு;புகள் தொடர்பான செயற்குழு பிரித்தானியாவும் சுவீடனும் யூலியன் அசான்ஜ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
அரசின் உள்ளிருந்து முணுமுணுக்கும் பேரினவாதம்!?
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை ஓர் தூரநோக்கற்ற செயலாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சி நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
(“அரசின் உள்ளிருந்து முணுமுணுக்கும் பேரினவாதம்!?” தொடர்ந்து வாசிக்க…)
வைர அட்டியல் புகழ் சுஷ்மா இன்று ரணிலை சந்தித்தார்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்தார். பிரதமர் ரணிலுடனான சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட தூதுக் குழுவினரும், இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது இருநாட்டு உறவுகள், மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட்டதாக தெரியவருகிறது. மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்த சுஷ்மாவுக்கு மகிந்த ராசபக்ச பெறுமதி வாய்ந்த வைர அட்டியல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். ஆனால் இம்முறை ரணில் எந்த அன்பளிப்பையும் வழங்கவில்லை என தெரியவருகிறது. (தினக்கதிர்)
தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா!!!
வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக தீர்வு! அதற்கு தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா!!!
ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில் மிகச் சிறிய சிறுபான்மைத் தரப்பினராகவே இருக்கின்றனர்.என்ன செய்யவேண்டும் என்பதை பெரும்பான்மையினர் தீர்மானிக்க முனைவார்களாக இருப்பின் கடும்போக்காளரரான சிறுபான்மையினர் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். அவரது முழுமையான நேர்காணல் பின்வருமாறு:
(“தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா!!!” தொடர்ந்து வாசிக்க…)