முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார் அவ்வைப் பாட்டி. அவவின்ற பூட்டப்பிள்ளையள் புலம் பெயர் நாட்டில் புதுப்புது ஐடியாக்களுடன் திரவியம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு புல்லரிக்க வைக்கின்றனர். கோலாகலமாகக் கொத்துப்போட்டு பத்தும் பலதும் பெற்று வாழும் தமிழர் ஒருங்கிணைபுக் குழு தனது(TCC) கொத்து வியாபாரத்தை விஸ்தரிக்க பலான ஐடியா வழங்குவதே எனது நோக்கம்.

(“முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை!” தொடர்ந்து வாசிக்க…)

நடேசனின் பார்வையில் புலியின் வாலைப் பிடித்தவர்கள்…..?

 

புலி எதிர்பாளராக இருந்த சேரன் ஜெயபாலன் போன்றவர்கள் நோர்வேயின் தலையீட்டின் பின்பு புலிகள் நிரந்தரமானவர்கள் என எண்ணியதால் தமிழ்தேசியம்பேசியதோடு புலிவாலைப்பிடித்தார்கள். ஆனால் புலி வாலைமட்டும் இவர்களிம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டது . ஆனால் வாலைபிடித்தவர்கள் விடமுடியாது என்பது ஐரணி(Irony) புலி பேரில் காசு உழைத்தவன் ஆயுதம் வாங்கியவன் எல்லாம் குண்டியில் ஒட்டின தூசுபோல் தட்டிவிட்டு போய்விட்டார்கள். . மிக்க சோகமான விடயம்தான். சேரன் ஜெயபாலன் மூச்சு அடங்கும் வரையும் புலிவாலை விடமுடியாது.

(“நடேசனின் பார்வையில் புலியின் வாலைப் பிடித்தவர்கள்…..?” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்காபரோவில் தமிழர் மரபுப்படி தேர்தல் திருவிழா

கனடா ஸ்காபரோ ரூஜ் ரிவர் பகுதி முன்னாள் ரொறொண்டோ கல்விச்சபை உ றுப்பினர் சூன் சான் நம் இராதிகாவை வென்று பாராளுமன்றம் சென்றபடியால் கல்விச்சபை அறங்காவலர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எனவே அங்கு ஒரு இடைதேர்தல் எதிர்வரும் திங்கள் 25.01.06அன்று நடை பெற இருக்கின்றது.

(“ஸ்காபரோவில் தமிழர் மரபுப்படி தேர்தல் திருவிழா” தொடர்ந்து வாசிக்க…)

கட்சித்தாவ சோமவன்ச முயற்சி

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இயங்கும் கூட்டு எதிரணியுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரியவருகிறது. மக்கள் சேவகர்கள் கட்சியை ஸ்தாபித்த அமரசிங்க, தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேசியுள்ளார். அச்சந்திப்பில், கூட்டு எதிரணியுடன் சேர அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவர், கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி, புதிய கட்சியைத் தோற்றுவித்தார். அத்துடன் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதற்கு அவர், ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முருக்கு பெருத்து தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கல்லவா!

தங்களின் மூன்று அம்ச கோரிக்கைகள் பற்றி கலந்துரையாட பேரவை தலைவர், அமைச்சர்கள் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில், அவர்கள் ஏற்புடையதாக தெரிவு செய்த 20-01-2016 திகதி அன்றே மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கிய முதல்வர், இரவு 8 மணிவரை தனது காரியாலய கேட்போர் கூடத்தில் நடத்திய கலந்துரையாடலின் முடிவு, சுமுகமாக முடிந்தமை ஒரு சிலரது உள்நோக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.

(“முருக்கு பெருத்து தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கல்லவா!” தொடர்ந்து வாசிக்க…)

வினயமான வேண்டுகோளை ஏற்றார் விக்னேஸ்வரன்!

வட மாகாணசபை பேரவைத்தலைவர் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 18-01-2016 திகதி நடத்திய ஒன்றுகூடலின் பின் முதல்வரிடம் கலந்துரையாட வேண்டிய மூன்று விடயங்கள் சம்மந்தமாக 20-01-2116 திகதி நேரம் ஒதுக்கி தரும்படி அவர்களால் வினயமாக விடப்பட்ட கோரிக்கையை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி 20-01-2016 திகதி மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

(“வினயமான வேண்டுகோளை ஏற்றார் விக்னேஸ்வரன்!” தொடர்ந்து வாசிக்க…)

வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் சகலரையும் ஒன்றிணைத்து ஐ.ம.சு.முவின் வெற்றிலைச் சின்னத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சு.க போட்டியிடுமென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். சு.கவில் பிளவை ஏற்படுத்தினால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் சு.கவில் உள்ளவர்களுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

(“வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்” தொடர்ந்து வாசிக்க…)

ஒபாமாவின் உரையும் அமெரிக்காவின் நிலையும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பேரரசுகள் என்றென்றைக்குமானவையல்ல. உலக வரலாற்றில் நிலையான பேரரசுகள் என எதுவும் இருந்ததில்லை. அவை பெரும்பாலும் வல்லரசுகளாக இருக்கின்றனவே தவிர, நல்லரசுகளாக இல்லை. அவை மக்களின் அவலத்தின் மீதும் துன்பங்களின் மீதும் சுரண்டல்களின் மீதும் கட்டியெழுப்பப்பட்டவை. மக்கள் எழுச்சியுறுகிற போது பேரரசுகளின் அத்திபாரம் ஆட்டங் காண்கிறது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலகின் தன்னிகரில்லாத பேரரசாக அமெரிக்கா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. உலகின் எம்மூலையில் எது நடந்தாலும் அதைத் தீர்மானிக்கின்ற, செல்வாக்குச் செலுத்துகின்ற சக்தியாக அதன் வளர்ச்சி வியக்கத்தக்கது. அதனாலேயே அதனை ‘உலகப் பொலிஸ்காரன்’ என அழைப்பதுண்டு. அமெரிக்கா பற்றி உலக மக்களிடையே உள்ள பிம்பம் அதன் வெளியுறவுக் கொள்கையுடன் பாற்பட்டது.

(“ஒபாமாவின் உரையும் அமெரிக்காவின் நிலையும்” தொடர்ந்து வாசிக்க…)

1977 இனக்கலவரம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக் கல்லூரியில் நடந்த களியாட்டம் விழாவின் இறுதிநாளன்று அங்கே போடப்பட்ட சுபாஸ் கபே இல் சாப்பிட்ட பொலிஸ்கார்ர்கள் பணம் கொடுக்கவில்லை .இதனால் சுபாஸ் கபே உரிமையாளர் பொலிஸ்கார்ர்களை திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த நகர அடிதடிக் குழுவொன்று என்ன பிரச்சினை என வினாவ அவர்களும் பொலிஸ்கார்ர்களைக் காட்டி விபரத்தைக் கூறினர்.அதில் இரு பொலிஸ்கார்ர்களை தனியான ஒதுக்குப் புறத்தில் வைத்து அந்த குழு தாக்கியது.அந்த குழுவினரை பொலிசாருக்கு நன்கு தெரியும்.

(“1977 இனக்கலவரம்” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் இனவாத சலசலப்புகள்!

சிறுபான்மையின மக்கள் மீது சிங்கள மக்கள் விரோதம் கொள்ளும்படியான இனவாதம் நாட்டில் விதைக்கப்பட்டமை கடந்த ஆட்சிக்காலத்திலேயே ஆகும். உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமடைந்திருந்த பத்து வருடத்துக்கு முற்பட்ட காலப் பகுதியில் பெரும்பான்மையின மக்களின் உள்ளங்களில் சிறுபான்மையினங்கள் மீதான விரோதம் மேலோங்கியிருந்த போதிலும், நாட்டில் திட்டமிட்ட முறையிலான இனவாத முன்னெடுப்புகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டது கிடையாது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலம் தொடக்கமே இனவாத செயற்பாடு என்பது ஒரு நிகழ்ச்சித் திட்டமாகவே ஆகிப் போனது.

(“மீண்டும் இனவாத சலசலப்புகள்!” தொடர்ந்து வாசிக்க…)