நோர்வே – இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு வருகின்றார். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்தடவையாகும். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல தரப்பினருடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
Author: ஆசிரியர்
புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்?
புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதையே, புத்தாண்டில் தாம் நிறைவேற்ற வேண்டிய அதி முக்கிய கடமையாக அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே, புதிய அரசியலமைப்பென்று கூறப்பட்டாலும், பிரதானமாக மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகவே அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படப் போகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்தல், தேர்தல் முறையில் சீர்த்திருத்தம் கொண்டு வருதல் மற்றும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியனவே அந்த மூன்று விடயங்களாகும்.
(“புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்?” தொடர்ந்து வாசிக்க…)
கிழக்கில் வெள்ள அபாயம்…
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல் இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதயபுரம், மாமாங்கம், திஸவீரசிங்கம் சதுக்கம், ஊறணி உள்ளிட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில்
பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சி.வி.விக்னேஸ்வரன் கூடா நட்பு – சம்பந்தன்!
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கைகளில் வடமாகாணசபை முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் சிக்கி இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபேட்சகராகவும், தமிழரசுக் கட்சியின் முதலமைச்சருக்கான வேட்பாளராகவும் போட்டியிட்டவர் விக்கினேஸ்வரன்.
(“சி.வி.விக்னேஸ்வரன் கூடா நட்பு – சம்பந்தன்!” தொடர்ந்து வாசிக்க…)
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !
இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால் செய்தியாளர் காட்டில் மழை.
ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்: உஷார் நிலையில் படை
நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பாதுகாப்புப் படைகள், எச்சரிக்கையுடன் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் மேஜர் ஜயனாத் ஜயவீரவே, இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
(“ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்: உஷார் நிலையில் படை” தொடர்ந்து வாசிக்க…)
ஜெர்மனி சோவியத் சோஷலிசப் புரட்சியின் 96 ம் ஆண்டு நிறைவு.
ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து, ஜெர்மனியில் 4 – 15 ஜனவரி 1919 இன்னொரு பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற்றது. பெர்லின், ஹம்பூர்க், மியூனிச் ஆகிய நகரங்களில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் சோவியத் குடியரசுகளை பிரகடனம் செய்தனர். இருப்பினும் அந்தப் புரட்சிகள் ஒரு மாதத்திற்குள் அடக்கப் பட்டன. வலதுசாரி இராணுவ அதிகாரிகளும், சமூக ஜனநாயக கட்சியில் இருந்த துரோகிகளும் எழுச்சியை அடக்குவதற்கு உதவினார்கள். அன்று நடந்த இனப்படுகொலையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளும் கொல்லப் பட்டனர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் ஆகியோரும் படுகொலை செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள்.
விக்கி அழைப்பு! சிவா மறுப்பு! விசமத்தனமான செய்தி!
தமிழ்மக்கள்பேரவையில்,இணையுமாறு,வடமாகாணமுதலமைச்சர்,விக்னேஸ்வரன்விடுத்தவேண்டுகோளை,முன்னாள்சட்டமாஅதிபரும்சட்டவாக்கநிபுணருமான.சிவாபசுபதிநிராகரித்துள்ளார்.இந்த பேரவையின்அரசியல்மீளமைப்புதொடர்பில்,அமைக்கப்பட்டுள்ளஉபகுழுவுக்கு,தனதுபிரதிநிதியாகசெயற்படும்வகையிலேயே,விக்னேஸ்வரன்சிவாபசுபதிக்குஅழைப்புவிடுத்திருந்தார்.அவுஸ்திரேலியாவில் தற்போதுவசித்துவரும்சிவாபசுபதி,அண்மையில்தனிப்பட்ட விஜயமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
(“விக்கி அழைப்பு! சிவா மறுப்பு! விசமத்தனமான செய்தி!” தொடர்ந்து வாசிக்க…)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(ஒபர்), நடிகர் விஷால் நிவாரண உதவி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நடிகர் விஷால் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒபர் தொண்டு நிறுவண ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் நிவாரண பொருட்கள் வழங்கினர். சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டலபாடி,கூத்தன்கோயில்,ஜெயம்கொண்டபட்டினம்,சாலியங்தோப்பு,விளாகம் ஆகிய கிராமங்களில் திரைப்பட நடிகர் சங்கம் ஒபர் தொண்டு நிறுவனம் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கினர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் மற்றும் தொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் ஆகிய இருவரும் நிவாரண பொருட்களை வழங்கினர்.
01 ஜனவரி 2016 இல் வெளியான கண்ணோட்டம் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்)
கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றாமல், செயல் ஆற்றல் களில் நாட்டங்கள் கொள்வீர்.
2008 ஜனவரியில் நிகழ்ந்த மாற்றம் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் மீண்டும் வழமையான பாணியல் செல்வதற்கான நிலைமைகள் உள்நாட்டில் பல்லின, பல்மத சமூகங்களின் அபிலாசைக ளாலும் மற்றும் சர்வதேச நிலைமைகளாலும் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ மய சூழ்நிலையைத் தளர்த்துவது, அது எடுத்த காணிகளை மீளவும் மக்களிடம் கையளிப்பது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியற் கைதிகளை விடுதலை செய்வது, காணாமற் போனோர், படுகொலை செய்யப்பட்டோர்; தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவது அனைத்தும் அவசியம்.
இனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கத்தக்க தீர்வுடன் கூடிய புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் முனைப்புடன் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
(“01 ஜனவரி 2016 இல் வெளியான கண்ணோட்டம் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்)” தொடர்ந்து வாசிக்க…)