அரசியல் இன்றேல் தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு என்ன? – TULF

தீவிர அரசியலில் 55 ஆண்டுகளுக்குமேல் ஈடுபட்டிருக்கும் நான் தமிழ் மக்கள் மத்தியில் எனது செயற்பாடுகள் பற்றி எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். 1960ம் ஆண்டு தொடக்கம் உள்ளுராட்சி மன்றங்கள் பாராளுமன்றம் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட்டு வந்திருக்கின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சம்பந்தமாக விசேடமாக இன்று மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பெரும் சாதனைகளை புரியலாமென கருதி நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன் இயக்கத்துக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் பற்றி விபரிக்க தகுந்தநேரம் இதுவல்ல. இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தெரியாமலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டு எதுவித பொறுப்பும் வழங்கப்படாது ஒதுக்கப்பட்டிருந்தேன். அதன் பின்னர் இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் சில புறந்தள்ளப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபிரதிநிதிகளாக காலத்துக்காலம் ஒரு கட்சி ஏனையவற்றை புறந்தள்ளி செயற்படுகின்றது. இதன் விளைவாக இன்று பெயரளவில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குகின்றதேயொழிய சில சந்தர்ப்பத்தில் ஒரு கட்சி மட்டும் தனியாகவும், வேறு சந்தர்ப்பத்தில் இரு கட்சி தலைவர்கள் இணைந்தும், பெருமளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அணியின் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளமையால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்டா இல்லையா? என்ற நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. இக்கட்டத்தில்தான் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்க உத்தேசித்து நல்லதொரு தலைமையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருந்தேன். சிலர் திட்டமிட்டு இம்முயற்சியை தோல்வியடைய செய்துள்ளனர். ஆனால் இன்றைய அவசர சூழ்நிலையை உணர்ந்து வட மாகாண முதலமைச்சரின் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் முன்னோடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைகூட விட்டுக்கொடுக்க தயாராக இருந்தேன்.

(“அரசியல் இன்றேல் தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு என்ன? – TULF” தொடர்ந்து வாசிக்க…)

ஈரானுடனான இராஜதந்திர உறவை துண்டித்தது சவூதி

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்திருக்கும் சவூதி அரேபியா, ஈரானிய இராஜதந்திரிகளுக்கு நாட்டில் இருந்து வெளியேற 48 மணி நேர அவகாசம் வழங்கியுள்ளது. சவூதி ஷியா மதத்தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் டெஹ்ரான் சவூதி அரேபிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே சவூதி இந்த அறிவிப்பை ஞாயிறன்று வெளியிட்டது.

(“ஈரானுடனான இராஜதந்திர உறவை துண்டித்தது சவூதி” தொடர்ந்து வாசிக்க…)

சிறுபான்மையினர் பிரச்சினைக்கு தீர்வு கண்டாலேயே நாட்டை பாதுகாக்க முடியும்

சிங்கள பௌத்தர்களுக்கு இலங்கைதான் ஒரே நாடு என்போர் சிந்திக்க வேண்டும்

பண்டா – செல்வா, டட்லி-செல்வா, இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள் அமுலாகியிருந்தால் நிலைமை மாறியிருக்கும். சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கைதான் என்று குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும் நிலைப்பதற்குச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

(“சிறுபான்மையினர் பிரச்சினைக்கு தீர்வு கண்டாலேயே நாட்டை பாதுகாக்க முடியும்” தொடர்ந்து வாசிக்க…)

உயர் தரத்தில் உயர்ந்த இடம் பெற்றவர்கள்…

(க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் புரியும் தமிழ் மாணவர்களின சிறப்பாக யாழ்மாணவர்களின் கல்வித்தரம் எந்நிலையை அடைந்திருக்கின்றது என்பதை. இது போரின் பின்னரான வளர்ச்சி நிலையை எடுத்துக்காட்டம் ஒரு காலக் கண்ணாடியாகவும் அமைகின்றது. -ஆர்)

இன்று (03) வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சையில் அதிகூடிய இஸட் புள்ளிகைளப் பெற்று நாடாளவிய ரீதியில் முதலிடம் பெற்றோரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வர்த்தக பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற அகீல் மொஹமட் நாடாளவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் குருணாகலை மலியதேவ வித்தியாலயத்தின் மாணவராவார்.

(“உயர் தரத்தில் உயர்ந்த இடம் பெற்றவர்கள்…” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுடன் விரைவில் இணைவேன்! – கருணா

விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன் அதன் நோக்கங்கள் சிறந்தவை என்கிறார் கருணா. தமிழ் மக்கள் பேர­வையின் நோக்­கங்கள் சிறந்­த­தாக இருப்­ப­தனால், வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரனை விரைவில் சந்­தித்துப் பேச்­சு­வார்­த்தை நடத்தி அப்­பே­ர­வையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்து செயற்­ப­ட­வுள்ளேன் என முன்னாள் பிர­தி­ய­­மைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா) தெரி­வித்தார்.

(“விக்னேஸ்வரனுடன் விரைவில் இணைவேன்! – கருணா” தொடர்ந்து வாசிக்க…)

எண்ணெய் தேடும் பேராசையினால் புவிக்கு வரப் போகின்ற பேராபத்து!

வளைகுடா நாடுகளே எண்ணெய் அகழ்விற்கு மிகவும் உகந்தவையாகத் திகழுகின்றன. இலங்கையின் கடல் எல்லைக்குள் உள்ள மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் தென்பட்டதாக அறிந்த நாம் பெரும் உவகை அடைந்தோம். முன்னர் பதவிக்கு வந்த அரசுகள் எண்ணெய் அகழ்வுக்கென்று பூர்வாங்க நடவடிக்கையில் ஈடுபட்டதையும் நாமறிவோம். சில வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கூட கைச்சாத்திடப்பட்டன.

(“எண்ணெய் தேடும் பேராசையினால் புவிக்கு வரப் போகின்ற பேராபத்து!” தொடர்ந்து வாசிக்க…)

சீனாவால் இறையாண்மைக்குப் பங்கம் – வியட்னாம்

தனது இறையாண்மையையும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் உடன்பாட்டையும் சீனா மீறியுள்ளதாக, வியட்னாம், குற்றஞ்சாட்டியுள்ளது. தென் சீனக் கடலில், இரு நாடுகளுமே உரிமைகோரும், செயற்கையான தீவின் விமான ஓடுபாதையில், சீனாவில் உருவாக்கப்பட்ட விமானத்தை, கடந்த சனிக்கிழமை தரையிறக்கியமைக்காகவே, இந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.

(“சீனாவால் இறையாண்மைக்குப் பங்கம் – வியட்னாம்” தொடர்ந்து வாசிக்க…)

செல்வம் எம்.பிக்கு திடீர் மாரடைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், திடீர் மாரடைப்பு காரணமாக, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

(“செல்வம் எம்.பிக்கு திடீர் மாரடைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.பி. பரதன் காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரதன், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

‘முள்ளிவாய்க்காலில் கடற்படை முகாமுக்காக காணிகள் பெறப்படும்’

தேசிய பாதுகாப்பு கருதி வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணியுரிமையாளர்கள் மூன்று தலைமுறையாக மேற்படி காணியில் வாழ்ந்துவருகின்றோம். 617 ஏக்கரில் 150 ஏக்கர் வயல் நிலமும் 276 ஏக்கர் அரச காணியும் காணப்படுகின்றது. எங்களுடைய காணிகளை கடற்படையினரின் முகாம் அமைப்பதற்கு விட்டுக்கொடுக்க முடியாதென தெரிவித்தனர்.

(“‘முள்ளிவாய்க்காலில் கடற்படை முகாமுக்காக காணிகள் பெறப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)