எத்தனை சோதனைகள்? எத்னை துன்பங்கள்? அத்தனையும் கண்டு முள்ளிவாய்கால் வரை சென்று முள்வேலி முகாமில் முடங்கி இன்றும் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழ முடியாது வாழ்ந்து வரும் எம் உறவுகள் இழக்காத ஒன்று நம்பிக்கை மட்டுமே. துன்பத்தை தொடக்கி வைத்தவர் அகிலம் எல்லாம் தஞ்சம் புகுந்து தம் சொந்த மண்ணில் காணாத சுகம் எல்லாம் சுகித்து முடவன் வாய் தேன் என ருசித்து மகிழ்ச்சியின் உச்ச நிலை அடைந்து சொர்க்க வாசலை தாம் வாழும் நாடுகளில் கண்டவரின் சொந்த நாட்டில் சோகம் சுமந்து வாழும் எம்மவர் துயர் தீர்க்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.
(“மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்!.” தொடர்ந்து வாசிக்க…)