ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது

 

புலிகள் செய்யும் கொலைகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.
முதலாவது வகை கொலைகள் புலிகளால் உரிமைகோரப்படும். அப்படி புலிகளால் உரிமை கோரப்பட்டு கொலைசெய்யபடுபவர்கள் சமூக விரோதிகள்இதிருடர்கள்இவிபச்சாரிகள் என ஊடகங்களால் சித்தரிக்கப்படுவர்.இவர்களில் பலர் சாதாரணா மனிதர்களாக இருப்பர். இக்கொலைகள் காலப்போக்கில் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் ஏனெனில் இவர்கள் சாமானியார்களாக இருப்பார்.இப்படியாக வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

(“ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது” தொடர்ந்து வாசிக்க…)

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 3

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சரானார். எனினும் சம்பந்தருக்குப் பின்பு விக்னேஸ்வரன் தலைவராகி விடுவாரோ என்ற ஏக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய எம்.பி ஒருவருக்கு ஏற்பட்டுவிட அவர் விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை முடக்குவதில் விடாப்பிடியாக நின்றார்.

(“கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 3” தொடர்ந்து வாசிக்க…)

ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க முடியும்.

(“ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!” தொடர்ந்து வாசிக்க…)

தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிக ளுக்கு தமிழ்மக்கள் பேரவை குந்தகம் விளை விக்குமா னால் அது தமிழ் மக்களுக்கு செய்யப்படும் துரோகமாகும் என இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார்.
அதே வேளை பேரவையின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் தடையாக இருக்காது எனவும் மாவை சேனாதிராசா அறிவித் துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு பேரவை ஓர் தீர்வுத்திட்டத்தை முன் வைத்தால் அது குறித்து பரிசீலீக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

(“தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்” தொடர்ந்து வாசிக்க…)

கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி

கல்முனை அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) திங்கட்கிழமை கல்முனை தொகுதி தமிழ் மக்கள் மாபெரும் கண்டன எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். கல்முனை பிரதான வீதியிலுள்ள தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் கண்டனப் பேரணி கல்முனை நகர் ஊடாக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை ஆகிய இடங்களுடாகச் செல்லவுள்ளது.

(“கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி” தொடர்ந்து வாசிக்க…)

பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு

யாழ். மாநாட்டில் அரசியல் தீர்வு குறித்து ஆராய 15 பேர் கொண்ட குழு நியமனம்

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

(“பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை

சம்பந்தன் – விக்கி பேச்சு தோல்வி

பங்கேற்ற கூட்டமைப்பினரிடம் விளக்கம் கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூட்டமைப்புக்குள் விரிசல் வலுவடைந்துள்ளமை தெளிவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில், யாழ்ப்பாணத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில், வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட விதம், இந்த அமைப்பை உருவாக்கியுள்ளவர்களின் பின்னணி, இதன் அடிப்படை நோக்கம் என்பன நீண்ட விவாதங்களுக்குரிய விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

(“தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி

தமிழ் மக்கள் பேரவை கொண்டுள்ள எண்ணங்கள், கொள்கைகள் கொண்ட யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து செயற்பட முடியும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘இங்கு யாரும் பின்வாசலால் வரவில்லை அனைவரும் முறையாக அழைக்கப்பட்டு முன்வாசல் வழியேதான் வந்தார்கள். எனவே, சுமந்திரனும் விரும்பினால் இந்த அமைப்பில் இணையலாம். அவர் தனது நிலைப்பாட்டை எம்மிடம் வெளிப்படுத்துவாரேயானால் நாம் அவருக்கும் அழைப்பு விடுப்போம்’ என்று முதலமைச்சர் கூறினார்.

(“தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)