அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தனது 5 வருட சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தமது 45 ஏக்கர் காணியை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஆனால் உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா தனது காணியில் குடியிருக்கும் லிங்கா நகர் ஏழை மக்களுக்கு அவ் காணியை வழங்க மறுப்பதுடன் அவர்களை அங்கிருந்து விரட்ட முயல்கிறாரே? இது என்ன நியாயம்? நீங்கள் மக்களுக்கு உங்கள் சம்பளம், சொத்து எதுவும் வழங்க வேண்டாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கணக்கு விபரங்களை மக்கள் முன்வைத்தாலே போதும். அதையாவது செய்வீர்களா?
(Ponniya Rasalingam)
Author: ஆசிரியர்
“பாவா” அக்காவும் நானும்…
பிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம். நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த குடும்பங்களில் ஒன்று எனது அப்பாவின் மைத்துனரான (அத்தை மகன்) ஐயன் அங்கிளின் ( தில்லையர் பூபாலபிள்ளை – இவர் ஒரு ஆசிரியர்) குடும்பம்.