“குமுதம் ரிப்போர்ட்டர்” மற்றும் அதன் அல்லக்கைகளுக்கு இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…….

 

லெகின்ஸ் அணிந்து பெண்கள் பொது இடங்களில் நடக்கும் போது கலாச்சாரம் நாசாமாகி போனது என்றும்….ஜீன்ஸ், T ஷர்ட் அணிந்து பெண்கள் நடமாடுவது தான் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றும் கூறி, அறிவுரைகள் கொடுக்கிறோமென்ற சாக்கில், பெண்களை பின் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தெரியாமல், அனிச்சையாக ஆடைவிலகும் நேரத்தில் படமெடுத்து அதை பத்திரிகையில் அச்சடித்து விநியோகம் செய்து கல்லா கட்டும், அலப்பரைகளுக்காகவும் அதை வாங்கிப் படித்துவிட்டு கலாச்சாரம்…கலாச்சாரம்…என்று தலைகீழாகக் குதிக்கும் அந்த பத்திரிக்கைகளின் அல்லக்கை ரசிகர்களுக்கும்….இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…அவனவன் வேலை என்னவோ அதை செய்யுறதவிட்டுட்டு அடுத்தவன் வீட்டு படுக்கையறையில் உற்று பாக்குறவங்களுக்கு தான் இந்தக் கலாச்சாரப் பிரச்சனை எல்லாம்…வெனிசூலாவின் முன்னாள் அதிபர் தோழர். ஹியுகோ சாவேஸ் ஜானதிபதியாக இருந்தபோது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி…அந்தப் பெண்மணி வெகு இயல்பாக குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்…இதனால் தோழர். சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை…அந்தப் பெண்மணிக்கு, தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதாக எந்த அவமான உணர்வும் இல்லை…! ஆடை அணிவதால் ஏற்படும் பிரச்சனை என்பது பார்க்கும் பார்வையிலேயே உள்ளது…!தோழர். சாவேசின் செயல்பாடு, ஒருவர் தன்னுடைய இளைய சகோதரியிடம் பாசத்துடன் காண்பிக்கும் செயல்பாடு…இதுவே கலாச்சாரம்…!அதன்றி ஆடை எப்போது விலகுமென்று காத்திருப்பதும் அல்லது ஏதாவது மறைந்து புகைப்படமெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்கொத்திப் பாம்பாக அலைவதுமோ அல்ல காலச்சாரம்…!

நன்றி….
படம் மற்றும் கருத்து உபயம் Sadan Thuckalai
(Kani Oviya)

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (4)

பிரச்சனையை தீர்ப்பதா அல்லது வளர்ப்பதா என்றால் அதில் தனக்கு எது லாபமோ அதைத்தான் பிரேமச்சந்திரன் செய்வார். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது தான் அவரின் வரலாறு. தமிழரசு கட்சியின் கோட்டை என கூறப்படும் கோப்பாய் கோமகன் வன்னிய சிங்கத்தின் தொகுதியில் கட்டைப்பிராயில் இருந்து பதவிக்காக இணைந்த இந்த புலியடி பயனாளி, புலிகளின் அனுசரணையிலும் பின்பு முள்ளிவாய்கால் பேரவல அனுதாபத்திலும் தான் கடந்த இரு தடவையும் பாராளுமன்றம் செல்ல முடிந்தது.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (4)” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வு எம் கையில் இருக்கிறது – பிரதமர் ரணில்

உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறையில் அமையக்கூடிய விசாரணை முறைமையை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது. அதனை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டில் இருக்கின்ற சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீதிமன்ற பொறிமுறையின் கீழ், அடிப்படை நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்கின்றன. அவற்றின் ஊடாக, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு கூடியவிரைவில் தீர்வு காணமுடியும். அவ்வாறு செய்யாவிடின் அது பாரிய காயமாகிவிடும் என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தொடர்பில் நாட்டில் பல்வேறுபட்ட குழப்பநிலை தோன்றியிருக்கிறது. சில அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் இவ்விவகாரத்தினை திரிவுபடுத்தி வெளியிடுகின்றனர். ஆகையினால் இது தொடர்பில் விளக்கமளிப்பது காலத்தின் கடமையாகும்.

(“தீர்வு எம் கையில் இருக்கிறது – பிரதமர் ரணில்” தொடர்ந்து வாசிக்க…)

இணக்கப்பிரேரணை முக்கிய திருப்புமுனை – ஹக்கீம்

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் இம்மாதம் 24ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது என்று அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த இணக்கப் பிரேரணை கடந்த தசாப்பதங்களில் சகல சமூகங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகள் அனுபவித்த துயரங்களை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையென இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது. நிறுவன ரீதியான சட்ட சீர்திருத்தங்களினூடாக நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு உரமூட்டுவதற்கும் இது வழிவகுப்பதாக அமையும். இலங்கை அரசாங்கம் – தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அதன் கவனம் செலுத்தப்படுகின்ற போதிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமையையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது.

(“இணக்கப்பிரேரணை முக்கிய திருப்புமுனை – ஹக்கீம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்ற போது காலையில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சில தமிழ் அரசியல்வாதிகளை மனித உரிமை பேரவையின் கீழ் தளத்தில் உள்ள தேனீர்ச்சாலையில் கண்டேன். பின்னர் நண்பகல் உணவிற்காக நான் அங்கு சென்ற போது தேனீர்ச்சாலையில் அதேகதிரைகளில் தான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் 5.30மணியளவில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க அந்த தேனீர்ச்சாலைக்கு சென்ற போது அப்போதும் அங்குதான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். ஜெனிவா செல்கிறோம், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கிறோம், கூட்டத்தொடரில் பேசுகிறோம், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்திக்கிறோம் என கூறிவிட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகள் இங்கு இவ்வாறு தேனீர்ச்சாலைகளில் காலம் கழிப்பதைத்தான் காணமுடிகிறது. ஜெனிவாவுக்கு வரும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் எந்த இராஜதந்திரிகளையும் சந்திப்பது கிடையாது. சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் சரி, தூதுவர்கள் இராஜதந்திரிகளும் சரி, இலங்கை என்று வரும் போது இரு தரப்பைத்தான் சந்திக்கிறார்கள். ஒன்று அரச தரப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அல்லது ஜெனிவா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இரண்டாவது தரப்பாக தமிழர்களின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மட்டுமே சந்தித்திருக்கின்றனர். இம்முறை ஜெனிவாவில் பிரித்தானிய தூதுவர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள் அரசதரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் தமிழர் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் மட்டுமே சந்தித்தனர்.

(Rajaguru Theyvendran)

கியூபாவில் பாடசாலைக் குழந்தைகளின் ஓய்வு நேரம்….

 

ஆயிரக் கணக்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட பேஸ்புக் பதிவுகளில் ஒன்று. கியூப மக்கள், முதலாளித்துவ சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாத காரணங்களில் இதுவும் ஒன்று. சோஷலிசத்தில் எந்தளவு குறை இருந்தாலும், அதுவே எமக்குப் போதும் என்று, கியூப மக்கள் இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள். கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (3)

(மாதவன் சஞ்சயன்)

வட மாகாண முதலமைச்சர் தனக்கு தரப்பட்ட வேலையை விட்டு அடுத்தவர் செயலை முடக்கும் செயலை அண்மைக் காலங்களில் செய்யத் தொடங்கி உள்ளார். மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை அவர் முன் சத்திய பிரமாணம் எடுத்து நல்லுறவை பேண முற்பட்டவர், ஆளுநர் மற்றும் பிரதம செயலாளருடன் முரண்பட தொடங்கினார். தன் போக்கில் செயல்பட அவர்கள் விடாததால் அவர்களை மாற்றும்படி மகிந்தவிடம் முறையிட்டார். மகிந்த ஆரம்பத்தில் சம்மதித்தாலும் அவரது அமைச்சர் அதனை தடுத்தார். வல்வெட்டியில் பிரபாகரன் மாவீரன் என கூறி புலியடி செல்ல புறப்பட்ட முதல்வர் பற்றி வத்தி வைத்தார். விக்கியர் தேர்தல் காலத்தில் ராணுவத்தை வெளியேற்றுவேன் என கூறினார். ராணுவ ஆளுனரை மாற்றுவேன் என்றார். இரண்டும் தனது அரசியல் இருப்புக்கு ஆபத்து என்பதால் அமைச்சர் மகிந்தரின் மனதை மாற்றியதால் முதல்வர் கோரிக்கை நிறைவேற வில்லை.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (3)” தொடர்ந்து வாசிக்க…)

திலிபன் பற்றி தமிழ்க்கவி அம்மாவே முகநுல் பின்னூட்டத்தில் உண்மை பேசியுள்ளார்.

“உண்ணாவிரத மேடைக்குப் போகும் போதே திலீபன் இறப்பது நிச்சயம் என்பது உறுதியாகவே இருந்தது. இடையில் நடந்ததெல்லாம் நாடகத்தின் காட்சிகளே.மக்களை புலிகளின்பால் மீட்டெடுக்க இந்த நாடகம் தேவையாக இருந்தது. இந்திய அமைதிப்படையின் வருகை புலிகள் விரும்பாத விடயம். வீணாக கொடுத்த விலை திலீபன்.அவ்வளவுதான்.”
– தமிழ்கவி (Thamayanthy Ks)

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலம்!!

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார்.india இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ மீற்றர் நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி சுரங்கமாகவும் அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துரையாடியுள்ளார். ஏற்கனவே, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைத் தரைவழிப் பாதைகளால் இணைக்கும் 8 பில்லியன் டொலர் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, 5.19 பில்லியன் டொலர் செலவிலான இந்திய – இலங்கை தரைவழிப்பாதை இணைப்புத் திட்டத்துக்கு உதவ ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !

இம்மாதம் 16ந் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக மீண்டும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமை பேரவையின் இவ்வாறான அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் 2009 இல் ஒரு தடவையும், பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாகவும் (2012-2015) வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், 2011 இற்கு பின்னரே திடீரென்று ஐ.நா.ம.உ. பேரவை விழித்துக் கொண்டு, இலங்கையின் மனித உரிமைகள் பற்றி கறாராகப் பேசத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் 9 ஆண்டு (2002-2011) காலப்பகுதியை மாத்திரமே தெரிந்து எடுத்து வைத்துக்கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியை தெரிந்தெடுத்ததின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதை உணரக்கூடியவர்களால்தான், இலங்கை தொடர்பான இவர்களது (அரசியல்) நிகழ்ச்சி நிரலையும் புரிந்து கொள்ள முடியும்.

(“இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !” தொடர்ந்து வாசிக்க…)