பொறியாளரை வளைத்துபோட்டது மைக்ரோசாப்ட்

பேஸ்புக் நிறுவனத்தில் பொறியியல் பிரிவுக்கு தலைமை வகித்து வந்த ஜே பாரிக்கை மைக்ரோசாப்ட் நிறுவனம் முக்கிய பதவியில் பணியில் அமர்த்தியுள்ளது, அமெரிக்க சிலிக்கான் வேலியில் முக்கிய விவாத பொருளாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரிசி நெருக்கடிக்கான காரணம் வெளியானது

சந்தையில் உருவாகும் அரிசி நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு என பாரிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார்.

காசாவில் 50 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி

கடந்த இரண்டு நாள்களில் மாத்திரம் காசா வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் இரண்டு தொடர் மாடிகள் தாக்கப்பட்டதையடுத்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கெதரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், போலியோ தடுப்பூசி வழங்கிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கம் உண்மையில் புதிதாக பணம் அச்சிடுகின்றதா?

(ச.சேகர்)

அண்மைய வாரங்களில் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, பிரதான ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்ட விடயங்களில் பணம் அச்சிடப்படுவதைப் பற்றியதாகும்.

விலைகளை குறைத்தது லங்கா சதொச

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. சதொசவின் பிரகாரம், பச்சைப்பயறு கிலோ கிராம் ஒன்றின் விலை 51 ரூபாவினால் 850 ரூபாவில் இருந்து 799 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌபி 20 ரூபாவினால் 900லிருந்து 880 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம்   வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினால் 248 ரூபாவிலிருந்து 243 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார். அனைத்து சதொச கடைகளிலும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தை தலா 300 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருணா-பிள்ளையான் ஆதரவாளர்கள் மோதல்: மூவர் காயம்

மட்டக்களப்பில், கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மற்றும் பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று (3) இரவு, ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக, மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதமர் மன்னாருக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னாருக்கு விஜயம் திங்கட்கிழமை(04) மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டார். பிரதமரின் வருகையினால் மன்னார் நகர பகுதியில் பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டதோடு, நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் கடும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டனர்.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்?

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் செவ்வாய்க்கிழமை (05) நடக்கவிருக்கிறது. சரி பாதி வாக்காளர்கள் ஏற்கெனவே வாக்களித்துவிட்டார்கள். வாக்குச் சீட்டைப் பெற்று, வீட்டிலிருந்தோ அஞ்சல் வழியாகவோ வாக்களிக்கவும் வசதி உண்டு. பொது இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் சாவடிகளிலும் வாக்குப் பெட்டிகளிலும் வாக்கைச் செலுத்தலாம். அமெரிக்காவில் தேர்தல் ஆணையம் இல்லை. மாகாண அரசுகள்தான் தேர்தலை நடத்துகின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும் இந்த வழிமுறைகளில் மாற்றம் இருக்கும். ஆனால் எல்லோரும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நேரடியாக வாக்களிப்பார்கள்.

“வரம்பற்ற 5/6 பெரும்பான்மை வேண்டாம்” -டில்வின் சில்வா

எதிர்க்கட்சியை செயலிழக்கச் செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் ஐந்தில் ஆறு (5/6)  பெரும்பான்மையைப் போன்று வரம்பற்ற அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி   எதிர்பார்க்கவில்லை என தேசிய மக்கள் சக்தி   உறுப்பினர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எகிறியது வெங்காயத்தின் விலை

நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக 10 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சந்தையில் தற்போது போதியளவு வெங்காயம் கையிருப்பில் இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.