இன்னமும் உயிர்வாழ்கின்றதா?

நாடு கடந்த தமிழீழம்

சுவிசிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதி பூண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள். ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் சனநாயகப் பேராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகள், மக்கள் முன்னாலான அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. அதனொரு அங்கமாக லண்டனிலும் சுவிசிலும் தேர்வாகிய மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பத்திரத்தினை மக்கள் முன் பெற்றுக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான தங்களின் உறுதிப்பாட்டினை மக்கள் முன் வெளிப்படுத்தி நின்றனர். தேர்வாகியுள்ள பிரதிநிதிகளை வரவேற்று அவர்களுக்கு உறுதுணையாக நின்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்துமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சுவிஸ் நிகழ்வில் இணைவழிப் பரிவர்தனையூடாக இணைந்து கொண்டு மக்களிடம் கோரியிருந்தார். இதேவேளை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பதனை அனைத்துல அரங்கில் நிறுவுவதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான செயற்பாடெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டமை உரிமை வழங்கலாகக் கொள்வதா, தென் பகுதி அரசியலில் புதிதாகக் காணப்படும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வதா அல்லது தென் பகுதி அரசியலில் இடம்பெற்று வரும் அரசியல் சதுரங்கத்தின் ஓர் அம்சமா என்பது இப்போதைக்குத் தெளிவாகவில்லை. ஆயினும், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இது நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் கொள்ளலாம்.

(“அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாத் தாயும், ஈழத் தாயும்!

தமிழ் நாட்டில் ஜெயலலிதா அம்மையார் “ஈழத் தாய்” அவதாரம் எடுத்து, தமிழ் உணர்வாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். அதே போன்று, ஜெர்மனியில் தற்போது அங்கெலா மெர்கல் “சிரியாத் தாய்” அவதாரம் எடுத்து, அரபு உணர்வாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். அரசியல்வாதிகள் எங்கிருந்தாலும் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. தனது நாட்டிற்கு வந்து சேர்ந்த சிரிய அகதிகளை சந்தித்து, அவர்களுடன் செல்பி படம் எடுக்கும் அளவிற்கு, அங்கெலா மெர்கல் எளிமையாக நடந்து கொண்டுள்ளார். ஆனால், நமது “ஈழத் தாய்” தமிழ்நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகளை சந்தித்ததாக அறியவில்லை. (Kalaiyarasan Tha)

முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்நாள் செயற்பாடுகள்

(அசோக்)
சில வாரங்களுக்கு முன், தமிழ்ஈழவிடுதலைப் புலிகளின் ஆரம்பகால தீவிர ஆதரவாளரும், புலிகளுக்கு பல வகைகளிலும் உதவி புரிந்த ஒருவரோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாக்காலங்களிலும் ஒரு குறிப்பிட்ட நபர்களை கடுமையாக நம்பி மோசம்போன மனிதர் என்றார். அவர் அதற்கு பல உதாரணங்களையும் சொன்னார். இப் பேச்சில் லண்டனில் இருக்கும் புலிகளின் மூத்த உறுப்பினர் என சொல்லிக் கொள்ளும் “அண்ணாச்சியைப் ” பற்றியும் கதை வந்தது.

(“முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்நாள் செயற்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

மகாபாரதம் சீரியல் பற்றி……!

நடத்தட்டும். பாஞ்சாலி 5 வரை மணந்தது சரியே என்று சொல்லி நடத்தட்டும். குந்தி தேவி மணமாகும் முன்பே தாயானது நாம் வணங்கும் சூரிய தேவன் அருளால் என சொல்லி நடத்தட்டும்.
மாடு மேய்ப்பவன் நாடும் ஆள்வான் என சொல்லித் தரட்டும். கடவுளே கண்முன் இருந்தாலும் , பகை , பொறாமை, நில அபகரிப்பு, சூழ்ச்சி இவைகளை அவரால் தடுக்க இயலாது என்பதை சொல்லித் தரட்டும்.
ராமன் சிவனை வழிபட்டான் என சொல்லித் தரட்டும். அப்படியானால் அவன் கடவுள் அல்ல என்ற உண்மையை சொல்லித் தரட்டும். பெண்ணை மானபங்கப்படுத்திய கதை தெரியப்படும் . பெண்ணை சந்தேகிக்கும் சராசரி ஆண் என்பது தெரியட்டும்.
பகுத்தறிவு உள்ள ஆசான் இவைகளை மறைக்க இயலாது.
மாணவன் மேலும் மேலும் முட்டாள் ஆகாமல்
இந்தக் கதைகளை அறிந்து ஆராய்ந்து புறந்தள்ளுவான்.(Kanniappan Elangovan)

அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர்

42 வருடங்களுக்கு முன்னர், இதே நாளில் 11.09.1973ல் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர் தோழர் சல்வடார் அலெண்டேயும், படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்காவின், கோர முகத்தை எப்போதும் நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
42 ஆண்டுகளுக்கு முன், நடந்த அமெரிக்காவின் இந்த ஜனநாயகப் படுகொலைகள், இராணுவ அத்துமீறல்கள் ,வன்முறைக் கொலைகள், அராஜகங்கள், பொருளாதராத் தடைகள் எத்தனை எத்தனை.
அவை இன்றும் அமெரிக்காவை எதிர்க்கும் பல்வேறு நாடுகளுக்கும் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நாம் இன்னும் படிப்பினை பெற்றவர்களாக இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பிக் கொண்டு துணைக்கு அழைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட எம் மக்களின் விடுதலையை அவர்களுக்கூடாக வேண்டி நிற்கிறோம். இப் புத்தகத்தில் ரெகிஸ் டெப்ரேயின் அலெண்டேயின் பதவிக்காலத்தில் எடுத்த பேட்டியும், பகுதி இரண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் சிலிக்கு பயணம் செய்து அங்கு நடந்துவந்த அரசியல் பொருளாதார மாற்றங்களை கவனித்து வந்த பிரிட்டீஸ் பொருளாதார நிபுணர் அலெக்நோவேயின் கட்டுரையும் இடம்பெற்றள்ளது. இவைகள், சமூக மாற்றத்திற்காக போரடுகின்ற சக்திகள் எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகள் -தடைக்கற்கள் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றது.  இன்றைய காலத்தில், நமது வாசிப்பிற்கும் – புரிதல்களுக்கும் இப் புத்தகம் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.(அசோக்)

சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு

சிரியாவில் தனது இராணுவ செயற்பாடுகளை ரஷ்யா அதிகரித்திருப்பதாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கவலையை வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பங்கேற்பு பிரச்சினையை தீர்க்க உத வாது என்று நேட்டோ தலைவர் nஜன்ஸ் ஸ்டொ ல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் ரஷ்ய வெளியு றவு அமைச்சர் செர்கே லவ்ரோவை தொலைபேசி யில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜhங்கச் செய லாளர் ஜோன் கெர்ரி இந்த விவகாரம் குறித்து கவ லையை வெளியிட்டுள்ளார்.

(“சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்

(Jothimani Sennimalai)

வரலாற்றில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகமும் ,வீரமும் நிறைந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இணையான சரித்திரம் உலக வரலாற்றிலேயெ வேறெங்கும் இல்லை . அவர் குழந்தைகளைக் கூட கொடிய ஆங்கிலஅரசிடம் பணயம் வைக்க நேரிட்டது. அந்த மைசூர்புலி கடைசிவரை களத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது . அதுமட்டுல்ல தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், கட்டபொம்மன் போன்ற மாவீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார் திப்பு. வட இந்தியாவில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு தென் இந்தியா ஒரு கெட்ட கனவாக மாற திப்பு ஒரு காரணமாக இருந்தார். அதே போல நவீன இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத காந்தி. இந்திய சுதந்திர வரலாற்றில் இருவருக்கும் தனித்த இடமுண்டு .

(“திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்” தொடர்ந்து வாசிக்க…)

என்னிடமிருந்த ஒரு மூடநம்பிக்கை…

(Comrade Kumaresan Asak)

அறிவியலில் நாட்டம் உள்ளவன் நான். அதன் அடிப்படையில், பொதுவாக முன்னேற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருப்பதாக நம்பி வந்திருக்கிறேன். சமூக அறிவியலிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவன் நான். அந்த அடிப்படையில் சமுதாயம் வளர்ச்சசியடைந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்து வந்திருக்கிறது, முந்தாநாள் இருந்தது போல் நேற்றைய சமுதாயம் பின்னடைந்த நிலையில் இல்லை, நேற்றைய சமுதாயத்தை விட இன்றைய சமுதாயம் மேலும் முன்னேறியிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது உண்டு.

(“என்னிடமிருந்த ஒரு மூடநம்பிக்கை…” தொடர்ந்து வாசிக்க…)

மெக்காவில் கிரைன் முறிந்து விழுந்து விபத்து 62பேர் பலி

சவுதி அரேபியாவில்  உள்ள புனித மெக்கா மசூதியில்  இன்று வெள்ளிக்கிழமை  கிரைன் முறிந்து  விழுந்து ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியானதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அதிகாரி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.  மேலும்  30 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். ஹஜ் புனித யாத்திரைக்காக அங்கு அதிகமான பேர் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.