எழுத்தாளர் நடேசனுடன் சந்திப்பு

அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு எதிர்வரும் 20 th September திகதி Sunday, மாலை 5.30 PM.மணிக்கு கனடாவில் 430 mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough Ontario நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்களான தேவகாந்தன் என் கே மகாலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு
Sabesan – 4168011654
e mail uthayam12@gmail.com
புரட்டாசி 09, 2015

ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!

(இளங்குமரன்)

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம். அரச ஆதரவாளர்கள், இலங்கை இராணுவம் இந்திய இராணுவம், பொலிசாருடன் உறவுகளைப் பேணியவர்களைக் கொன்றோம். அயல்நாட்டில் தலைவரைக் கொன்றோம், அவருடன் அப்பாவிகளைக் கொன்றோம். சரணடைந்த படையினர் பொலிசாரைக் கொன்றோம். அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் கொன்றோம். எங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு எங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் நாம் கொன்றோம்.

(“ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!” தொடர்ந்து வாசிக்க…)

பாருங்க!…..பாருங்க!!….பாருங்க!!!…. – இதுக்கு பேருதானா அரசியல் …………………………..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் தமிழன் நம்புறான் பாருங்க!
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழன் வோட்டு போடுறான் பாருங்க!!
டக்ளஸ் தேவானந்தாவும் தொடர்ந்து தேர்தலில் வென்று மந்திரியாகிறார் பாருங்க!!!
போதைவஸ்து கடத்தல்காரனைக் கூட ஆயர் இராயப்பு ஜோசேப்புவும் கத்தோலிக்க குருமாரும் ஆதரிக்கிறார்கள் பாருங்க!!!!
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என இன்னமும் சில தமிழர்கள் சொல்லுறாங்கள் பாருங்க!!!!!
பச்சைப் பயங்கரவாதி எழிலனின்; மனைவி அனந்தி கூட மனித உரிமை பற்றி பேசுகிறா பாருங்க!!!!!!
இதுக்கு பேருதானா அரசியல்.?

அமிர் பின் பிரபாகரன்? சம்மந்தர் முன் சர்வதேசம்!

(மாதவன் சஞ்சயன்)

1977ல் ஸ்ரீலங்கா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. அமிர்தலிங்கம் பாசையில் சொல்வதானால் அது ஒரு அரசியல் விபத்து. 1970ல் வந்த பாராளுமன்றத்துக்கு 1975ல் தேர்தல் நடத்தாது 1977வரை நீட்டி மக்களை வாட்டி வதைத்த சிறிமா அரசை சிங்கள மக்கள் 8 க்குள் அடக்கினர். அன்று சுதந்திர கட்சி வெறும் 8 ஆசனங்கள் பெற்று பாராளுமன்றத்தில் 3ம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜே ஆர் மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, தமிழ் ஈழத்துக்கு ஆணை கேட்டு 18 ஆசனங்கள் மட்டும் பெற்ற த.வி.கூட்டணி எதிர்கட்சியாக மாறியது தான், 1948ல் சுதந்திரம் பெற்ற இலங்கை 1972ல் ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் பெற்றபின் எழுதப்பட்ட புதிய அத்தியாயம் ஆகும். அதே அரசியல் விபத்து 2015ல் ஏற்பட்டிருப்பது வரலாறு மீண்டும் திரும்புகிறதா என்ற எண்ணக்கருவை எல்லோர் மத்தியிலும் விதைக்கிறது.

(“அமிர் பின் பிரபாகரன்? சம்மந்தர் முன் சர்வதேசம்!” தொடர்ந்து வாசிக்க…)

இப்படிப் போகின்றது விக்கி, சுரேஷ், கஜேன் கூட்டமைப்பு

சிங்களத்தின் ‘அடி கழுவி – தழுவி’, வடக்கில் நடக்கிறது மாபெரும் தமிழினத் துரோகச்சதி !!!
மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் கௌரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களையும், பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு கடந்த மூன்று நாள்களாக ‘சம்பந்தன் – சுமந்திரன் – மாவை’ கூட்டுக்கும்பல், இருவருக்கும் கடும் ‘பிரஸர்’ கொடுத்துக்கொண்டிருக்கின்றது! சோற்றில் உப்புபோட்டுச் சாப்பிடும் சமூகமாகவிருந்தால் வெகுண்டெழுந்து நல்லூர் ஆலய முன்றலில் ஒன்றுகூடி எதிர்ப்பை காட்டுங்கள் !!!

முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?

செய்தி: விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை! 11-ம் திகதி கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு – மாவை சேனாதிராஜா
இந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா?
மக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா?
உள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா?
ரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா?
எதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை?
நீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.
உங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா?
(Ponniya Rasalingam)

இந்தியாவின் ஏழை முதலமைச்சர

முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா? அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.

(“இந்தியாவின் ஏழை முதலமைச்சர” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய அகதிகளும் வலதுசாரிகளும்

சிரிய அகதிகளை பொறுப்பேற்கும் நாடுகள் தொடர்பாக, வலதுசாரிகள் ஒரு முக்கியமான நாட்டை மறைப்பதைக் கவனித்தீர்களா? எதற்காக “முஸ்லிம் நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை?” என்று கேட்டு பொங்கி எழும் வலதுசாரிகள் யாரும், இஸ்ரேல் மீது குற்றஞ் சாட்டவில்லை! அதிசயம்! அதிசயம்!! அதிசயம்!!! வலதுசாரிகளின் (போலி) “மனிதாபிமான உணர்ச்சி” மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்ரேல் சிரியாவின் எல்லையில் உள்ள அயல் நாடு. “மத்திய கிழக்கின் ஒரேயொரு ஜனநாயக நாடு” என்று, அடிக்கடி தற்பெருமை அடிக்கும் நாடு. முன்பொருதடவை, போரில் காயமடைந்த, இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த நாடு. அது மட்டுமல்ல, ஏற்கனவே ஆயிரக் கணக்கான சிரிய பிரஜைகள், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பிரதேசத்தில் வாழ்கிறார்கள். இத்தனை “பெருமைகளுக்குரிய” இஸ்ரேல், எதற்காக ஒரு சிரிய அகதியை கூட ஏற்றுக் கொள்ளவில்லை? “ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேலால் அது முடியாத காரியம்” என்று பிரதமர் நெத்தன்யாகு காரணம் கூறுகின்றார். அப்படியானால், அண்ணளவாக இஸ்ரேல் அளவு பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடான லெபனான், இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதே? அது எப்படி? (Kalaiyarasan Tha)

டக்ளஸ் தேவா, தொண்டா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவி?

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கின்றது என்று பிரபல ஆங்கில செய்தித் தளங்களில் ஒன்றான எக்கனமினெக்ஸ்ற் செய்தி பிரசுரித்து உள்ளது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் மலிக் சமரவிக்கிரம சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்கின்றார், டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சுப் பதவி பெறுகின்றனர் என்று இப்பத்திரிகையின் அரசியல் நிருபர் எழுதி இருக்கின்றார். இச்செய்தியை உறுதிப்படுத்த டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை தொடர்பு கொண்ட போதிலும் முடியாமல் போய் விட்டது.