கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய தெரிவித்தார். இந்தமுறை நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும் இந்த மாதத்திற்கான திகதி ஒதுக்கீடுகள் நிறைவுப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிவில் விமானப் போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக இலங்கை சுங்கப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜயரத்ன இன்று காலை CAASL இன் பணிப்பாளர் நாயகம் உட்பட பல அதிகாரிகள் முன்னிலையில் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

’’நாங்கள் உகாண்டா கதை எதுவும் சொல்லவில்லை”

உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டை முன்வைத்ததாக எழுந்த கூற்றுகளை மறுத்த NPP உறுப்பினர் டில்வின் சில்வா, அத்தகைய கூற்றுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் தான் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.

மின் கட்டண குறைப்பு போதுமானதாக இல்லை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தொடர்பாடல் பணிப்பாளர்  ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

உத்திர பிரதேசத்தில் கோர விபத்து: 28 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், இன்று (4) காலை  9 மணியளவில், சுமார் 40 பேருடன், சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அரச,தனியார் ஊழியர்களின் விடுமுறை குறித்த அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாகன இலக்கத்தகடு விநியோகம் இடைநிறுத்தம்

வாகன இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பாசிக்குடாவில் பலத்த பாதுகாப்பு

அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு  பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன 

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய பேச்சு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்    வடக்கு மாகாண  ஆளுநர்   நாகலிங்கம் வேதநாயகன்,  யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் சனிக்கிழமை (02) இடம்பெற்றது.

திகனையில் வாகனம்: போதகர் சிக்கினார்

தெல்தெனிய, திகன பிரதேசத்தில் பொலிஸாரால் சனிக்கிழமை (02) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட போலி இலக்கத் தகடுகள் கொண்ட பிராடோ ரக ஜீப், தெல்தெனிய கல்தென்ன போதகருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.