ரூபவாஹினி தலைவர் இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் கலாநிதி செனேஷ் பண்டார தனது பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களினால் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம்;பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய பொலிஸ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

8747 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

நாளை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியடையும் டிசெம்பர் 26ஆம் திகதி (நாளை) காலை 9.25 மணி முதல் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 டிசம்பர் 26, அன்று நடந்த இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது

“இராணுவ காணிகளை விடுவிக்க மக்கள் கோரவில்லை” – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மக்கள் , இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகிறார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார். 

தோழர் றொபேட் (த.சுபத்திரன்) 67 ஆவது பிறந்த தினம்


(தோழர் மோகன்)

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சுபிட்சமான எதிர்காலத்திற்காகவும் ஆயுதந் தாங்கிய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காத்திரமாக செயலாற்றிய தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களது 67 வது பிறந்த தினம் 24.12.2024 இன்றாகும்.

தோழர் றொபேட்

(தோழர் சுகு)

“நான் பிறந்தது பாலன் பிறந்த நேரத்திலாக்கும் “என்று நகைச்சுவை உணர்வுடன் பெருமிதம் கொள்வார்
இன்று அவரது 67வது அகவை நாள்
இலங்கையின் 76ஆண்டு சரித்திரத்தின் திருப்பு முனையில் தோழர் சுபத்திரன் ரஞ்சன் றொபேர்ட்டை நினைவு கூரல்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை:இஸ்ரேல் ஒப்புக்கொண்டது

ஜூலை மாதம், ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.