லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம்

சொகுசு காரை உதிரிபாகங்களாக சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மருத்துவ சிகிச்சைக்காக ரத்வத்தவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நுகேகொட பதில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

விருந்து கொடுத்தால் எம்.பி பதவி பறிபோகும்?

நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஸ்பெயினில் வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் ஏற்பட்ட  வெள்ளத்தில், 95 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூர தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

”பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன”

புதிய அரசாங்கத்திற்கு பலமான அதிகாரத்தை வழங்காமல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் சில அரசியல்வாதிகளும் ஊடக நிறுவனங்களும் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இனி கொழும்பில் வீடுகள் இல்லை – ஜனாதிபதி

வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, 

முன்னாள் ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்தார் பிரதமர்

பொது மக்களால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அரசியலமைப்பை கற்க வேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார். 

”அனுமதியின்றி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது”

பொதுத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக முன்னணியால் (NDF) முன்மொழியப்பட்ட மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் தங்கள் அனுமதியின்றி தங்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

அவர்களின் சலுகைகளை நீக்கியது ஏன்?

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர் தலைவர்களை அச்சுறுத்திய வேட்பாளர்

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி உள் நுழைய முற்பட்ட ஒருவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு தகாத வார்த்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த, தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக சனிக்கிழமை (26) அன்று பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் உதவி  ஆணையர்   மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிலும் குறித்த பாடசாலையின் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.