முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Author: ஆசிரியர்
போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை வழங்கிய எகிப்து
போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியுள்ளது. எகிப்து தனது பரிந்துரையில், “ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்” குறிப்படப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Gold Card Visa: ஒரே நாளில் 1,000 அட்டைகள் விற்பனை
ஜனாதிபதி அனுரவின் முதலடி, அரசியல்வாதிகளுக்கு தலையிடி
மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் அரசியலுக்குள் நுழையும் பலரும், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு குறுகிய காலத்தில் உரிமையாளர்கள் ஆகிவிடுகின்றனர். மிக இலகுவாக, நிதியைக் கொள்ளையடித்து, இலஞ்ச, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டே சொத்துக்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவையெல்லாம், ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
பிறக்கும் போதே அடையாள எண்
தேசிய பிறப்புச் சான்றிதழ் செயல்முறை 15 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் (ICTTA) நிறுவனம் மற்றும் பதிவாளர் நாயகத் துறை, நபர்கள் பதிவுத் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என அரச பரிபாலனம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அதரிவித்துள்ளார்.
குற்றங்களை தடுக்க 500 சிறப்பு அதிரடிப்படை
அமைச்சர்களின் குடியிருப்புகள் தொடர்பான அறிக்கை வெளியானது
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.