பிரதமருடன் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில், வெள்ளிக்கிழமை (18), கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. 

சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

2025 பெப்ரவரியில் கொண்டு வரப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

’ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும்’ – சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், என்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும்.

வாகனங்கள் குறித்து மஹிந்த வெளியிட்ட அறிக்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவல் அல்ல என மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 6 உத்தியோகபூர்வ வாகனங்களில் 3 வாகனங்களை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்று-பாலமுனை பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 34,43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது

பெப்ரவரி பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்பு

டிசெம்பரில் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை ( பட்ஜெட்)  தாக்கல் செய்வோம். பெப்ரவரி- மார்ச் மாதத்திற்குள் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தங்காலையில் சனிக்கிழமை (19)   தெரிவித்தார்.

டெலிகொம் தலைவர் இராஜினாமா

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் தலைவர்   ஏ.கே.டி.டி.அரந்தர அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதம் ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் பணிப்பாளர் சபைக்கு கடந்த 18ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் உள்ள ஏ.வின் இராஜினாமா 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்களை முன்னிட்டு SLPP புதிய தீர்மானம்

தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும், எதிர்காலத் தீர்மானங்களுக்கு தலைமைத்துவம் மற்றும் சரியான வழிகாட்டுதலை வழங்குவதற்கும் மூலோபாயக் குழுவொன்றை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறிய 09 பேர் கைது

பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆகும்.

மஹிந்தவின் வாகனங்களை மீளகேட்கும் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் (backup vehicle) அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.