2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Author: ஆசிரியர்
எரிபொருள் விலையை குறைக்க முடியும்…
விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலையை 15 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைக்க முடியுமென முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் எரிபொருள் விலை தொடர்பில் கருத்துரைத்தவர்கள், தற்போது மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் எனவும் முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேர தெரிவித்துள்ளார்.
மீண்டும் யாழ் தேவி – மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வடக்கு புகையிரத மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்தேவி ரயிலை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமையில் புதிய முன்னணி உதயம்?
வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்
வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடியிருப்பு கட்டண மிகுதிகளை கவனிக்குமாறு பணிப்புரை
முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்குமாறு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி 28 அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.