காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின் கொலைவழக்கு ஒன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரட்டுஹேனகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில், இமதுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று (16) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Author: ஆசிரியர்
’’முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்”
மத்திய கிழக்கு வாழ் இலங்கையர்க்கு விசேட அறிவித்தல்
இஸ்ரேலுக்கு அமெரிக்கா காலக்கெடு
தேசியப் பட்டியலில் இடம் கேட்கிறார் தமிதா
இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகையும் அரகலய செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன, அக்கட்சியிடம் இருந்து தேசிய பட்டியல் ரீதியிலான இடத்தை கோரியுள்ளார். SJB தலைமையிடம் இருந்து ஒரு தேசிய பட்டியல் இடத்தை கோரியதாக திருமதி அபேரத்ன டெய்லி மிரருக்கு இன்று கூறினார். எனது கோரிக்கைக்கு கட்சித் தலைமை இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
”அனுபவம் இன்றி பாராளுமன்றத்தை நடத்த முடியாது”
இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)
(தோழர் ஜேம்ஸ்)
(இந்தப் பதிவில் இணைத்திருக்கும் புகைப்படம் டாடா(TATA) நிறுவனத்தின் செயற்பாடுகளை துல்லியமாக எடுத்து இயம்புகின்றது)
1962 ம் ஆண்டு நடைபெற்ற சீன இந்திய யுத்தம் இவரின் வாழ்வை தனி மனிதனாக திருமணம் செய்யாது வாழ்வதற்கும் வழி கோலியது.
அதுவே அவரின் வாழ்வின் இறுதி வரை தொடரவும் வைத்து.
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல குறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.