சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் – வல்வை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் உயிரிழந்தார்.

நீரில் மூழ்கியது சஹாரா பாலைவனம்

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் பணம் வைப்பிலிட்டோர் குறித்து விசாரணை

வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணம் வைப்பிலிடப்படுள்ளதாக கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.

இஸ்ரேல் மக்களை வெளியேறுமாறு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு, அந்நாட்டு மக்களை ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் படைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களின் வீடுகளை இராணுவ தளங்களாக பயன்படுத்தி வருவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனுரவுக்காக விட்டுக்கொடுத்தார் விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

விமான சாகசம்: 240 பேர் மயக்கம்; 5 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மார்பகங்கள் பற்றி பேசுவதற்கு தயங்கும் பெண்கள்

சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பமாகியுள்ளது. உலகில், ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்த மாதத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.  

200 மில்லியன் டொலர்கள் வழங்க WB அனுமதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன யுத்தம் ; மட்டக்களப்பில் அமைதிப் பேரணி

பாலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு நகரில் , பெண்களினால் அமைதி பேரணியொன்று திங்கட்கிழமை (07) காலை முன்னெடுக்கப்பட்டது .

காத்தான்குடி மாணவி கொழும்பு வரை துவிச்சக்கர வண்டி பயணம்

போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக காத்தான்குடியிலிருந்து கொழும்பு வரையான துவிச்சக்கர வண்டி பயணத்தை காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா என்ற மாணவி திங்கட்கிழமை (07) காலை ஆரம்பித்துள்ளார்.