நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ கடக்கும்?

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என, நிலநடுக்கத்திற்கான அமெரிக்க ஆய்வு மையம் யு.எஸ்.ஜி.எஸ். கணித்துள்ளது.  இன்று மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இன்று பகல் 2.50 மணியளவில் ரிக்டர் அளவில் 4.7ஆக நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரசாங்க அனுமதி மற்றும் பொறுப்பின்மை:

(Sivakumar Subramaniam)

இவை அனைத்தும் இல்லாமல், ஒரு அரச அதிகாரி “ஏதோ ஒரு காரணத்திற்காக” கையொப்பமிட்டு அனுமதி வழங்குகிறார். பின்னர், “எங்களிடம் அனுமதி உள்ளது” என்று இதற்கு ஆதரவாக, சமூகப் பொறுப்பற்ற சில வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால், இறுதியில் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை விளைவிக்க
இந்த பிரச்சினையின் ஆழத்தையும் விளைவுகளையும் புரிந்து கொண்டு, அறிவார்ந்த உரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவிய பொலிஸ் அதிகாரிகள்

தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. 

நடந்தாய் வாழி வழுக்கையாறு

(பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து)

நடந்தாய் வாழி வழுக்கையாறு

ஊர்பலகண்டு ஊற்றின்றிய நீரதை
கார்கால கருமேகம் கனதியாய்
பொழியவும்
கோடை தொடரினும் வற்ற மறுக்கும்
வனிதை!
வட்டுக்கோட்டையதை எட்டிப்பாய்ந்து
சென்று
வாட்டமின்றி அராலி ஆளித்தாயுடன்
ஆரம்பட அணைத்துக்கலக்கும் வரை
நடந்தாய் வாழி வழுக்கையாறு!!

வழுக்கையாறு (வழுக்கியாறு)

பேங்கொக்கில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பேங்கொக்கில் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் பலர் அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இதனால் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர். இன்று நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்களும் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினை மரபுரீதியாக தொடர்கிறது -இந்தியா

1974 ஆம் மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மரபுரீதியாக தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம்

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

காணாமல் போன வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன மாகாண சபை வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வேதநாகம் எட்வின் நிமல் என்ற பேருந்து ஓட்டுநருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய கோரியவர் கெஹலிய

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவின் ஆலோசனையின் பேரில், தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் முன் தெரிவித்தனர்.