மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  தனித்து களம் காண்கிறது.

வாகன இறக்குமதி குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம்

“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.

பல வாகனங்கள் மாயம் ; ஒரு மாத காலம் தேவை

ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

9 ஆவது பாராளுமன்றில் 19 எம்.பிக்கள் மாற்றம்

2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வில் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66வது உறுப்புரைக்கு அமைய 19 பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டது.

வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.  அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இனி போட்டியிடேன்: பந்துல

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வௌ்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வௌ்ளிக்கிழமை (04) சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

மாற்று வழியில் செல்வதே இலக்கு: ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு இது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பாகும்.

யாழில் ரூ.1 கோடி கொள்ளை: இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.