அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Author: ஆசிரியர்
லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
லிட்ரோ எரிவாயு மற்றும் Litro Gas Terminal Lanka (Pvt) Ltd இன் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தங்கொடுவ Porcelain PLC இன் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றினார். சன்னா, அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்ற, பட்டய நிர்வாகக் கணக்காளர்களின் (UK) பட்டய நிறுவனத்தில் ஒரு சக மற்றும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்களின் சக ஊழியரும் ஆவார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத் துறையில் முதல் தரப் பட்டம் பெற்றுள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது.
இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும். அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் புதிய விலை 319 ரூபாவாகும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுசரணை அரசியல்
பல அரச நிறுவனங்கள் கலைக்கப்பட உள்ளன
”இதையே தான் கோட்டாவும் செய்தார்”
”20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளனர்”
மதுபானசாலைக்கு எதிராக சவப்பெட்டி ஆர்ப்பாட்டம்
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை உடனடியாக இட மாற்றக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மதுபானசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை(30) அன்று சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் அரச அதிபரின் வாக்குறுதிக்கமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை இடைநடுவில் கை விட்டுச் சென்றனர்