நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மட்டும் நேபாளத்தின் பல பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் பல இடங்களில் வெள்ள நீர் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.
Author: ஆசிரியர்
’’பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன’’
விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்தார்.
அநுரவுக்கு ருவாண்டா வாழ்த்து
கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார். குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க, ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது
உலக சிறுவர் தினம் மற்றும் உலக ஆசிரியர் தினம் போன்ற நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது என கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, அனைத்து அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
ஈ-விசா மோசடி குறித்து விரைவில் விசாரணை
O/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகின
2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகி உள்ளன. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.
புலமைப்பரிசில் சர்ச்சை- முடிவு எட்டப்பட்டது
புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கு அனைத்து தரம் 5 மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. கசிவு குறித்து நிபுணர் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, நேர்மையை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க அமைச்சகம் முடிவு செய்தது
கொடுப்பனவு நிறுத்தம் குறித்து விளக்கம்
அரச வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள திட்டம்
அரச நிறுவனங்களுக்கு, மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினை மற்றும், திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.