2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டயாருக்கு 15,000 ரூபாவில் இருந்து 25000 ரூபாய் வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Author: ஆசிரியர்
“சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சு”
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (25) ஆற்றிய விசேட உரை
பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,
பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.
“இரட்டை கோபுரத் தாக்குதல்” விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா
‘பிரக்ஞான் ரோவரின்’ புதிய கண்டுபிடிப்பு
ஜனாதிபதி அனுரவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “இந்தியாவின் அண்டைநாட்டுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. எமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன் “. என்று தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருடைய வாழ்த்துக்கு அனுரகுமார திஸாநாயக்கவும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் சுரங்கத்தில் வெடி விபத்து: 50 பேர் பலி
ஜனாதிபதி அனுரவுக்கு சந்திரிக்கா வாழ்த்து
ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க அவர்களுக்கு பலம் வழங்கப்படும் என அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.