கொய்யப்படும் மாகாண அதிகாரங்கள்

(இல. அதிரன்)

மனம் உண்டானால் இடமுண்டு. ஆனால், இலங்கையில் இந்த வார்த்தைக்குரிய அர்த்தம், யாருக்கும் தெரியாது என்பதே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. கேட்பதும் கிடைப்பதும் தேவையுள்ளவனுக்காக இருந்தால், அது சரியானதாக இருக்கும்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் ஆயிரத்து 553 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வத்தளை, ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 128 பேருக்கு ​கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

ஈரான் புதிய ஜனாதிபதியாக றைசி பிரகடனம்

ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக, கடும்போக்குவாத நீதித்துறைத் தலைவரான இப்ராஹிம் றைசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உள்நாட்டமைச்சு அறிவித்துள்ளது. 48.8 சதவீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதத்தில், 61.95 சதவீதமான வாக்குகளை றைசி வென்றுள்ளதாக உள்நாட்டமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இலங்கையின் மாகாணசபைகளைமக்களுக்குப் பயனுடையவைகளாகஆக்குவதற்குஏதாவதுவழியுண்டா!(கடிதத் தொடர் – 12)


2013ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனைமுதலமைச்சராககொண்டுவடக்குமாகாண சபை செயற்படத் தொடங்கியதைஅடுத்துஒருசிலமாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இத்தொடரில் 12வதும் இறுதியுமானகடிதமே இது. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்..எவ்.நெற், சூத்திரம்.கொம்,தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றையகாலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூகவிடயங்களோடுதொடர்புபட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்துக்கும் பொருத்தமானவைஎன்றுகருதுகிறேன் . இவை தொடர்பானஉங்களதுஅபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.

தோழர் நாபா நினைவுகள்: நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள்

(தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா உட்பட சக பதின்மூன்று தோழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாடு, சென்னை, சூளைமேட்டில்- இந்திய மண்ணில் வைத்துப் படுகொலை செய்த நாள் 19.06.1990. இன்றுடன் (19.06.2021) முப்பத்தியொரு ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்துன்பியல் நிகழ்வு நேற்றுத்தான் நடந்தது போல் இன்னும் நினைவில் நின்று நெருஞ்சி முள்ளாக நெஞ்சில் தைத்துக்கொண்டிருக்கிறது.

போராளிகளின் தியாகிகள் தினம் – 31

(சாகரன்)

வரலாற்றில் சிலர் அதிகம் பேசப்படுபவர்களாக காணப்படுவார்கள். அதில் இடதுசாரிக் கருத்தியலை ஏற்பவர்கள் வலதுசாரிக கருத்தியலை பின்பற்றுபவர்கள் என்று வேறுபாடுகள் இன்றி அவ்வாறு பேசப்படுபவர்தான் சேய் என்ற செகுவேரா. இவர்களுடன் உதைபந்தாட்ட வீரர் மடோனாவையும் நாம் இணைத்துக் கொள்ளலாம். பிடல் காஸ்ரோ பற்றி பார்வையும் உலகில் அதிகம் அவ்வாறுதான் இருக்கின்றது. அவர்களுக்கு அப்பால் மாக்ஸ் லெனின் ஏங்கலஸ் என்று பட்டியல் நீளுகின்றது.

ஐரோப்பியக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள்….

சுவிற்ஸர்லாந்தை வீழ்த்திய இத்தாலி……

யூரோ கிண்ணத் தொடரில், இத்தாலியில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், சுவிற்ஸர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாக, மனுவல் லொகடெல்லி இரண்டு கோல்களையும், சிரோ இம்மொபைலி ஒரு கோலையும் பெற்றனர். இந்நிலையில், இப்போட்டியில் வென்றதன் மூலம் விலகல் முறையிலான சுற்றுக்கு முதலாவது அணியாக இத்தாலி தகுதி பெற்றுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய வைரம்

உலகின் மூன்றாவது மிகப்பெரியதாக நம்பப்படும் வைரம் ஒன்று பொட்ஸ்வானாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1,098 கரட்கள் எடையுள்ள குறித்த கல்லானது பொட்ஸ்வானா ஜனாதிபதி மொக்வீட்சி மஸிஸியால் காண்பிக்கப்பட்டுள்ளது. வைர நிறுவனமான டெப்ஸ்வானாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வாரங்களிலேயே குறித்த வைரம் காண்பிக்கப்பட்டுள்ளது.

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

(சின்னையா செல்வராஜ்)

இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 பெண்களும் 31 ஆண்களும் நேற்று  முன்தினம் (16) உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.