இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 பெண்களும் 31 ஆண்களும் நேற்று  முன்தினம் (16) உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

பைடனும், புட்டினும் இணக்கம்

இணையப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுக்களை ஆரம்பிக்க ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் நேற்று இணங்கியுள்ளனர்.

சட்டம் கொடுத்த அதிகாரம் இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபை

(சாகரன்)

1985 ஜுலையில் தமிழர் தரப்பு திம்புவில் ஓரணியில் ஒரே கோரிக்கையில் பலமாக நின்று இலங்கை அரசுடன் சமர் புரிந்து நம்பிக்கை ஏற்படுத்தினர். இந்தியா தனது நலன்கள்… தனது வேலைத் திட்டத்திற்கு அமைய செயற்பட முயலும் என்ற பிராதிய வல்லரசு என்ற சிந்தனையும் புரியப்பட்டாலும் அவர்களின் நலன்களை இலங்கை வாழ் சிறுபான்மையினம் தனது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை வெல்வதற்குரிய தந்திரோபாய செயற்பாட்டிற்குள் வெற்றியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உலக ஒழுங்கில் தமிழ் பேசும் தரப்பு கையாண்டதாகவே திம்பு பேச்சுவார்த்தை முடிவுற்றது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் அரச தலைவர்கள், படை அதிகாரிகளைக் குறி வைத்து, ஒரு பிரேரணையை நிறைவேற்றி, மூன்று மாதங்கள் முடிவடையும் முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இலங்கை அரசாங்கத்தைக் கதி கலங்கச் செய்யும் வகையில், பிரேரணை ஒன்றைக் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று காலை 7.30 மணியளவில் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டெல்லி செல்லும் அவர், இன்று காலை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். டெல்லியில் கட்டப்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கட்சியின் அலுவலகத்தையும் அவர் பார்வையிடுவார்.

திரும்பி பார்க்க வைத்த திம்பு பேச்சுவார்த்தை

(சாகரன்)

1970 களில் முற்கூறுகளில் இது…. மிதவாதத் தலமைகளின் பாராளுமன்ற பிரதிநித்துவம் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்குரிய நம்பிக்கையான செயற்பாடுகளை போராட்டங்களை முன்னெடுக்கவில்லை…. முயற்சிகளை செய்யவில்லை.

லாட்டரிச் சீட்டு போதை.

(Rathan Chandrasekar)

இருபது வருஷம் இருக்கும் ?
நான் பணிபுரிந்த அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியர்
ஒருநாள் கண்ணீர் சுரந்தார்.
“அண்ணா, என்னாச்சு?” என்று பதறினேன்.
“நான் மீண்டுவிட்டேன் ரதன்.
அடிமையிலிருந்து மீண்டுவிட்டேன்….”
குடிபோதை மாதிரி அவருக்கிருந்தது
லாட்டரிச் சீட்டு போதை.

ஈழமும் திராவிடமும்

(Suguna Diwakar)

சமூக வலைத்தளங்களில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியினரும் சில ஈழத்தமிழர்களும் கலைஞரையும் தி.மு.க.வையும் தனிப்பட்ட முறையில் வசைபாடி பின் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகளையும் வசைபாடும் நிலைக்குச் சென்றதையும் அதற்கு எதிர்வினையாகத் தி.மு.க.வினரில் ஒருபிரிவினர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் விமர்சனம் என்பதைத் தாண்டி தனிநபர் இழிவுபடுத்துதல் என்ற எல்லைக்குச் செல்வதையும் காணமுடிகிறது.

இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 11)


2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்..எவ்.நெற், சூத்திரம்.கொம், தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்துக்கும் பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.