இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் டொலர் நிதியுதவி

“சுபீட்சத்தின் நோக்கு“கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிக் குடும்பத்தை விடுவித்தது அவுஸ்திரேலியா

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியாவில் சமூகத் தடுப்பில் வாழ அவுஸ்திரேலியா அனுமதிக்கவுள்ளது.

திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி

(என்.கே. அஷோக்பரன்)

எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக, அந்நாட்டின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தமிழ்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பொலிஸாரும் மத்திய புலனாய்வு பிரிவினரும் இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குறித்த ஆயுத குழு எது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை

வவுனியா மேயர் கைது

வவுனியா விடுதியொன்றின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ், வவுனியா மேயர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ள 9 வைத்தியசாலைகள்

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் 09 வைத்தியசாலைகளையே இவ்வாறு சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளே சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவதற்கும் இன்னும் இரு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் செல்லலாமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தோழர் றொபேட் என்ற சுபத்திரன்

(தோழர் ஜேம்ஸ்)

ஈழவிடுதலைப் போராட்டத்தையும் 1990 இற்கு பின்னரான கால கட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் சுபிட்சமான வாழ்வு பற்றியும் பேசவேண்டின் தோழர் சுபத்திரன் பற்றி பேசாமல் நாம் கடந்து செய்ய முடியாது.

மு.க.ஸ்டாலினுக்கு செல்வம் எம்.பி கடிதம்

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும், கவனம் செலுத்துமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பங்காளிகளின் தனிவழி சந்திப்பில் முக்கிய அமைச்சர்கள் இருவர் பங்கேற்பு

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சிலர், தனியான சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.