மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மைதிலி சிவராமன் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். 1960-1968 காலத்தில் ஐ.நா.வில் இந்திய தூதரக உதவியாளராக பணியாற்றிவர் மைதிலி சிவராமன். இடதுசாரிய தாக்கம் பெற்ற அவர், தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். மார்க்ஸிஸ்ட் பெண்ணுரிமை இயக்கத்தில் தீவிரமாக இயங்கி, அதன் முக்கியத் தேசிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். 1968 டிசம்பர் 25 இல் நடைப்பெற்ற கீழ் வெண்மணிக் கொடுமையை கள ஆய்வுசெய்து ‘Haunted by fire’ என்னும் நூலை இயற்றினார். அந்நூல்தான் அன்றைக்கு வெண்மணிக்கொடுமையை உலகிற்கு எடுத்துச்சொன்ன ஆங்கிலநூலாக இருந்திருக்கிறது. அதுபோலவே, வாச்சாத்தி வன்கொடுமைகளை களத்திற்கு சென்று ஆவணப்படுத்தி, போராடி வெளியுலகிற்கு அக்கொடுமையை பரவலாக தெரியப்படுத்தியவர் மைதிலி சிவராமன் அவர்கள்.
தம்முடைய 81 வயதில் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு இன்று உயிரிழந்துள்ள மூத்த தோழருக்கு செவ்வணக்கம்.
இராமச்சந்திர மூர்த்தி.பா
Author: ஆசிரியர்
தோழர் பாலா அவர்களின் 36வது ஆண்டு நினைவு.
பத்தேகம சமித்த தேரர் மறைவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மறைவு செய்தி கிடைத்ததுமே உடனடியாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தோழர் யோகரட்னம் அவர்களுடனேயே தகவலைப் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் நட்பின் ஆழம் அறிந்தவன் நான்.அந்த நட்பின் பின்னணியில் பெரியதோர் வரலாறே உண்டு. தோழர் யோகரட்னம் “தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் ” எனும் நூலை எழுதியவர்.
ஆபத்து மிக்கப் புதியவகைக் கொரோனா
வியட்நாம்மில் ஆபத்துமிக்கப் புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கில் உருமாற்றமடைந்திருந்தாலும் இந்தியா, இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வைரஸ்களே ஆபத்து மிக்கதாக இருந்து வருகிறது. வியட்நாம் வைரஸ் மிக வேகமாகப் பரவுவதோடு, காற்றிலும் பரவுமெனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, இங்கிலாந்து, இந்திய வைரஸின் கூட்டுக் கலவையாகவே இந்த வைரஸ் இருப்பதாகவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாருக்கு உள்ளானவருக்கு விருதா?
மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதை திருப்பி அளித்த வைரமுத்து
கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தித்திருந்து. நானும் அதனை நன்றி பாராட்டி வரவேற்றேன்.
நான்காவது தடவையாக வென்ற அசாட்
சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், 95.1 சதவீதமான வாக்குகளுடன் நான்காவது தடவையாக வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவை, செய்தியாளர் மாநாடொன்றில் சிரியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஹம்மெளடா சப்பாஹ் நேற்று அறிவித்த நிலையில், 14 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில், 78 சதவீதமானோர் வாக்களித்ததாகக் கூறியுள்ளார்.