(Rathan Chandrasekar)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
EPRLF செயலாளர் நாயகம் பத்மநாபாவும்
அவர்தம் தோழர்களும்
நம் சென்னை கோடம்பாக்கத்தின்
சக்கரியா காலனியில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட
அந்தக் கொடூர நிகழ்வு….
Author: ஆசிரியர்
தோழர் பத்மநாபாவும் ராஜீவ் காந்தியும்
1990 ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திலொரு நாள் (திகதி ஞாபகம் இல்லை )காலையில் திரு ராஜிவ் அவர்களை அவரது இல்லத்தில் தோழர் பத்மநாபா இறுதியாக சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியில் வரும்போது வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்ததுடன் மிகவும் கரிசனையுடன் தோழர் நாபாவின் பாதுகாப்பு பற்றியும் வினாவினார். தோழர் நாபாவும் வழமையான தனது ஒரே பதிலான ” No Problem ” என்று சொன்னார்.
‘காடுகளை….மரங்களைக் காப்போம்…’
கி.ரா.வுக்கு அரசு மரியாதை: தமிழக அரசுக்கும் கௌரவம்
தமிழ் இலக்கிய வெளியில் இயங்கும் வெவ்வெறு சிந்தனைப் பள்ளிகளின் மையமாக இருந்த கி.ராஜநாராயணனின் (1923-2021) மறைவு தமிழுக்கு இந்த ஆண்டில் ஏற்பட்ட பேரிழப்பாகும். தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.ரா., நாட்டாரியலும் செவ்வியலும் நவீனவியலும் இயைந்த புள்ளியில் இயங்கினார் என்பதும், பேச்சுநடைக்கும் எழுத்துநடைக்கும் இடையே அவருடைய படைப்புகள் பாலமாக அமைந்தன என்பதும் அவருடைய தனித்துவம் ஆகும்.
பிக்பொஸ் செட்டிற்கு சீல் வைப்பு
பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியானது சென்னையிலுள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியானது கொரோனா விதிமுறைகளை மீறி, நடைபெற்று வந்ததாகவும் இதனால் அதில் கலந்து கொண்ட ஆறு போட்டியாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கறுப்பு பூஞ்சைக்குப் பின் வெள்ளை பூஞ்சை வருகிறது
கொரோனா, கறுப்பு பூஞ்சை நோய் பரவலை தொடர்ந்து தற்போது வெள்ளை பூஞ்சை நோய் பரவி வருவதாக மருத்துவத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கறுப்பு பூஞ்சை என்ற நோய் பரவத் தொடங்கியது.
இலங்கை: கொரனா செய்திகள்
நாட்டை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போலித் தகவல் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஜுன் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் முழு நாடும் முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக பரப்பப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற போலி செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 3)
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராகக் கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் நிசடகநெவ.உழஅஇ ளழழனனசயஅ.உழஅ யனெ வாநநெந.உழஅ ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்புபட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்
முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
இஸ்ரேலும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும், கடந்த சில நாள்களாக ஆயுத முனையில் மீண்டும் பொருதிக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் இயக்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தின் காசாப் பகுதியை இடைவிடாது இஸ்ரேல் தாக்கி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இதுவரை 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாப் பகுதியில், 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.