கடந்த 12 வருடங்களாக, மே மாதம் 18ஆம் திகதி, ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்’ ஈகைச் சுடரேற்றி நினைவுகூரப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் வந்துபோகும் நத்தார், புதுவருடம், தைப்பொங்கல், சித்திரைப்புத்தாண்டு, தீபாவளி, ஊர்க் கோவில் திருவிழா போன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் கடமையாகவோ, சடங்காகவோ, முகத்தைக் காட்டும் நிகழ்வாகவோ கருதிவிடக் கூடாது.
Author: ஆசிரியர்
இலங்கை: கொரனா செய்திகள்
இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர்- 2)
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் eprlfnet.com, sooddram.com and thenee.com ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன். எனவே இக் கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.
ஈனர்களின் அருவருப்பு ஊட்டும் மாரடிப்பு
ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும்
(என்.கே. அஷோக்பரன்)
இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக, சிங்கப்பூர் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில், சிங்கப்பூர் ஓர் ஆச்சரியான தேசம்தான். எந்த இயற்கை வளங்களும் பெரிதாகக் கிடைக்காத, ஒரு குட்டி நகரம் அது.
நினைவேந்தலில் ஈடுபட்டஎண்மர் கைது
இலங்கை: கொரனா செய்திகள்
பாணந்துறை- மோதரவில பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 450 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, குறித்த நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்ததாக,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 2,500 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இடதுசாரிகளின் புதிய முகம்
கேரளத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இடது முன்னணி. சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல் அது கைப்பற்றியிருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த கேரளத்தில் இது ஆச்சரியமானதுதான். வழக்கத்துக்கு மாறான இந்த வெற்றிக்கு, கடந்த சில ஆண்டுகளில் கேரளத்தின் அரசியல் இயங்குமுறையில் ஏற்பட்டுள்ள அடிப்படையான மாற்றங்களே காரணம்.
அசண்டை வேண்டாம்
அசண்டை வேண்டாம்; முண்டியடித்தால் மீளவும் முடக்கத்துக்கே வழிசமைக்கும். பழ மொழிகளில் பல வழக்கொழிந்துவிட்டன; இன்னும் சில உருமாறிவிட்டன. அதிலொன்றுதான், ‘பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து’ எனப் பலரும் கூறும் பழமொழியாகும். பந்திக்கு முந்திச் சென்று சாப்பிடவேண்டும்; கடைசியில் சென்றால் சில வகை உணவுகள் தீர்ந்துவிடக்கூடும். ஆனால், படையில் பின்னுக்குச் செல்ல வேண்டும். தவறி முன்னால் சென்றால், ஆபத்து என்பதே பொதுவான அர்த்தமாகும். ஆனால், இந்தப் பழமொழிக்குள் ஆழமான பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன.
இலங்கை: கொரனா செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. இன்றிரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.