சீனாவும் இந்தியாவும் இலங்கையும்

(என்.கே. அஷோக்பரன்)

ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைக்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location).

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளொன்றுக்கு நடத்தப்படவேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்திலிருந்து 30,000 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.சி.​ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள், பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவரும் வரை தனிமையில் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பிக்கையில் ​தோற்றார் நேபாளப் பிரதமர்

பாராளுமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் நேபாளப் பிரதமர் கஹட்கா பிரசாத் ஷர்மா ஒளி தோல்வியடைந்துள்ளார். அந்தவகையில், பிரதமர் பதவியில் தொடருவதற்கு தான் போதுமான ஆதரவைக் கொண்டிருக்கின்றார் எனக் காண்ப்பிப்பதற்கான பிரதமர் ஷர்மா ஒளியின் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கையின் இராஜதந்திரம்

(திருஞானசம்பந்தன் லலிதகோபன்)

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.சீனாவின் உலக முதல்வன் நிலைக்கான இன்னோர் அங்கீகாரம்.அமெரிக்கா தலைமையிலான மேற்குசார் கேந்திரம் மெல்ல மெல்ல வலுவிழந்து , சீனா தலைமையில் கிழக்கு சார் உலகமொன்று கட்டியெழுப்பப்படுவதை காணலாம்.விரைவில் சீனாவின் யுவான் நாணயமும் சர்வதேச நாணயமாக அங்கீகாரம் பெறலாம்.
நெடுந்தீவில் சீனா, கிழக்கு முனையத்தில் சீனா என தமிழ் அரசியல்வாதிகள் போல கூப்பாடு போடாமல் இதற்கு பின்னாலுள்ள சீனாவின் உழைப்பினை நாங்கள் நுணுகி பார்க்க வேண்டும்.சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னரான தொண்ணூறுகளின் ஆரம்ப பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட” நவீன சீனா” கருத்தியல் ஓடு போடும் அளவிற்கு வந்துள்ளது.

46 ஆண்டுகளுக்கு முன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த 12 அம்சத் திட்டம்

(Maniam Shanmugam)

ஈழத்து சமுதாய வளர்ச்சியின் இன்றைய கட்டத்தில் மீறமுடியாத முன் தேவையான தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டி எழுப்புவதில் இலக்கியப் படைப்பாளிகள் பங்களிப்பைச் செலுத்துவது அவசியமாகும்.
உருக்கமான வேண்டுகோள்களாலும் உள்ளத்தைத் தொடும் அறைகூவல்களாலும் மட்டும் ஒரு இலட்சியம், ஒரு கருத்துருவம், இவை எவ்வளவுதான் மகோன்னதமானவையாக இருந்தாலும் பயனுள்ளவையாகிவிட முடியாது. இந்த உன்னத இலட்சியமும் நல்ல கருத்தும் சாதனைப்படுத்தப்படுவதும், வாழ்க்கை எதார்த்தமாக்கப்படுவதும், இவை அர்த்தமுள்ளவையாக பயன்பாடுள்ளவையாக இருக்க வேண்டுமானால் அவசியமாகும்.

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இந்தவாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்த எதிர்வினைகளை, சில நாள்களாக நேரடியாகவும் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைத்தன. முடிவுகள் வெளியாகிவிட்டன; இதனுடன் தொடர்புடைய தரப்புகள் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் இரண்டுதான். முதலாவது, பரீட்சை எழுதிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் செய்யவேண்டியது. அது, ‘அடுத்தது என்ன?’ என்ற வினாவைத் தொடுப்பதாகும்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடு முழுயைாக முடக்கப்படாதென தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா   மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பொருள்கள்  விநி​யோகம் மற்றும் மக்களின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 

கேரளம்: இடதுகூட்டணிவெற்றிசொல்லும்சேதி

(செ.இளவேனில்)

கேரளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறிமாறி ஆட்சிக்கு வருவதுதான் எழுதப்படாதவிதி. 1982-க்குப்பிறகு இப்போதுதான் அங்கு ஆளுங்கட்சி ஆட்சியைத்தக்க வைத்துக் கொண்டுள்ளது. 140 இடங்கள் கொண்ட கேரள சட்ட மன்றத்தில், இடது கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் இடங்கள் 99. இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்துவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபாஜக, இருந்த ஓரிடத்தையும் இழந்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இன்று 22 கொவிட்-19-ஆலான இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அந்தவகையில், உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 786ஆக உயர்ந்துள்ளது.  

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட, முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர், அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார்.