வடக்கு கிழக்கு இணைக்கப்படாது – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிபர் அடித்ததில் ஏழு மாணவர்களுக்கு காயம்

பாடசாலையின் அதிபரினால்  கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு  மாணவர்களை பிரம்பால்  தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. 

வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

PAYE வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானம்

PAYE வரியை  (உழைக்கும் போது செலுத்தும் வரி) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதி முழுமையாக நீக்கப்படும்

2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது X தளத்தில் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தீர்மானத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார். 

சஜித்துக்கே ஆதரவு – உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். 

98 சதவீத தபால் மூல வாக்குகள் பதிவு

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் இறுதிக் கட்டடத்தை அடைந்துள்ளன என பிரதி தபால் மா அதிபர் ராஜித் கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

IMF நிபந்தனைகளை மீறினால் என்ன நடக்கும்: எச்சரிக்கின்றார் ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறுவது நாட்டில் மீண்டும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்பட்ட புதிய செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்காக 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நல்லூர் ​தேருக்கு சென்றவர்களின் கவனத்துக்கு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட, இன்னமும் உரிமை கோரப்படாத பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.