யாழ்.துணைவேந்தருக்கு திடீர் மாரடைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கியூபாவுக்கு புதிய தலைவர்

கியூபாவின் மிகவும் அதிகாரமிக்க பதவியான கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராக மிகேல் டயஸ்-கனல் பெயரிடப்பட்டுள்ளார். அந்தவகையில், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் கஸ்ரோவின் பெயரில்லாத முதலாமவராக கியூபாவை டயஸ்-கனல் ஆளவுள்ளார். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குறித்த நகர்வானது நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

‘பெரியண்ணா’வின் வீட்டுக் கோடியை கடுமையாகக் கண்காணிக்கவும்

நாலாபுறங்களும் கடலால் சூழப்பட்டிருக்கும் தீவுக்குள், கொரோனா வைரஸ் பரவியமைக்கு அரசாங்கத்தின் அக்கறையின்மையே பிரதான காரணமாகுமென முதலாவது கொரோனா அலையின் போது, பெருமளவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

புதுப்புது அரசியல் குழப்பங்கள்

(மொஹமட் பாதுஷா)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறி, நாட்டைப் புதிய இயல்பு நிலைக்குத் திருப்பிய பிறகு, அதைவிடப் பெரிய அரசியல் குழப்பங்கள், நாட்டைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் இவற்றை மறைக்க, என்னதான் பகிரதப் பிரயத்தனங்களை எடுத்தாலும், ‘ஒரு சோற்றுப் பீங்கானுக்குள் முழுப் பூசணிக்காய் போல’, அவையெல்லாம் வெளியில் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட் தொற்றாளர்கள் இன்று (19) இனங்காணப்பட்டனர். புதிய கொவிட் தொற்றாளர்கள் 63 பேர், இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19  தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம்: குளத்தின் அவலம்

(Mylvaganam Sooriasegaram)

நான் வசிப்பது ராசாவின் தோட்ட வீதியில். குப்பை எடுக்க யாழ் நகரசபை ஒழுங்காக வருவதில்லை. எனது உக்கக் கூடிய/ உக்க முடியாத குப்பைகளை யாழ் நகர சபை சேகரிக்க ஒழுங்காக வருவதில்லை. ஆகவே வழமைபோல் இவற்றை சைக்கிளில் கண்ணாதிட்டி சேகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு அருகிலுள்ள கண்ணாதிட்டி குளத்தை பார்வையிட போனேன். இதன் அருகில் காளி கோயில் ஒன்று இருக்கிறது. படங்களைப் பார்க்கவும் கீழே.

அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார் விவேக்கின் மனைவி

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்தவர்.

விவேக் நினைவாக…

சின்னக்கலைவாணர் இயற்கை காவலன் நடிகர் விவேக்கின் மறைவின் அஞ்சலிக்காக பதினைந்து மாங்கன்றுகளை அன்னமலை பிரதேச வைத்தியசாலையில் நடுகை செய்யப்பட்து. கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் மரநடுகையில் ஈடுபடுவதைக்காணலாம். (படங்கள்: சகா)

5 நாள்களில் 52 பேர் மரணம்

வாகன விபத்துகளால் கடந்த 5 நாள்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதிக்குள் 399 விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன், இதில் 669 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மது​போதையில் வாகனம செலுத்திய 1834 சாரதிகளும் கடந்த 5 நாள்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மியன்மார் முடிவு

மியன்மாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக மியன்மார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மியன்மாரிலுள்ள இலங்கை தூதுவராலயம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி அமைச்சின் மீன்பிடி நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.