காணாமல் போன வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன மாகாண சபை வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வேதநாகம் எட்வின் நிமல் என்ற பேருந்து ஓட்டுநருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய கோரியவர் கெஹலிய

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவின் ஆலோசனையின் பேரில், தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் முன் தெரிவித்தனர்.

ஆசிய வாகன களஞ்சிய சந்தைகளில் வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீது 25 சதவீத வரியை விதித்தமையை தொடர்ந்து ஆசிய வாகன களஞ்சிய சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனின் தடை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார் விஜித

பிரிட்டனின் தடை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம்  வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் வைத்து, புதன்கிழமை (26) தெரிவித்தார்.

JVP தலைவர் ரோஹன விஜேவீர எவ்வாறு கொல்லப்பட்டார்?

(Kiri Varma0

சுடப்பட்டு அரை உயிரில் இருந்தவரை தீயில் போட்டு எரித்த ராணுவ அதிகாரிகள்

கண்டி, உலப்பனவில் உள்ள ஒரு வீட்டில், தனது குடும்பத்தினருடன் நிமல் கீர்த்திசிறி அத்தநாயக்க என்ற பெயருடன், வாழ்ந்து கொண்டிருந்த ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

சவேந்திர, கருணா உள்ளிட்ட நால்வருக்கு தடை

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை வழங்கிய எகிப்து

போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியுள்ளது. எகிப்து தனது பரிந்துரையில், “ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்” குறிப்படப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Gold Card Visa: ஒரே நாளில் 1,000 அட்டைகள் விற்பனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த கோல்ட் கார்ட் விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்ட் கார்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல்ட் கார்ட் வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

ஜனாதிபதி அனுரவின் முதலடி, அரசியல்வாதிகளுக்கு தலையிடி

மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் அரசியலுக்குள் நுழையும் பலரும், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு குறுகிய காலத்தில் உரிமையாளர்கள் ஆகிவிடுகின்றனர். ​மிக இலகுவாக, நிதியைக் கொள்ளையடித்து, இலஞ்ச, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டே சொத்துக்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவையெல்லாம், ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.