திபெத்தின் யார்லங் ஸாங்போ நதியின் குறுக்கே, மிக பிரமாண்ட அணையை கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது, இது சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் இந்தியா தரப்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Author: ஆசிரியர்
ஏப்ரல் கிளர்ச்சியின் 50 ஆண்டுகளின் பின்னர்: ஜே.வி.பியும் தமிழரும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்று, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி அமைதிகாக்கையில் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியின் பணிகளை, ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) ஆற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஜே.வி.பி உறுப்பினர்களது பாராளுமன்ற உரைகள் நன்கறியப்பட்டவை. கடந்த இரண்டு தசாப்த காலங்களில், பிரதான எதிர்க்கட்சிகள் செய்யத் தவறியவற்றை, ஜே.வி.பி பாராளுமன்றத்தில் செய்து வந்திருக்கிறது. குறிப்பாக, சீனிக் கொள்வனவு மோசடி, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளைத் ஜே.வி.பி தாக்கல் செய்திருக்கிறது.
நீர்கொழும்பை விஞ்சியது பீகார் “தகனமேடை”
இலங்கை: கொரனா செய்திகள்
இறுதி யுத்தமும் இரைக்காக காத்திருந்த தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளும்.
2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன்.
நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன்.
பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது.
மணிகளான யோசனைகளுக்குள் பேயைத் தேடிய அரண்டவன் கண்
வெலிக்கடையை வென்ற வெருகல்.
(Sutharsan Saravanamuthu)
கறுப்பு ஜூலையை விஞ்சிய சிகப்புச் சித்திரை .கிழக்கு மண்ணில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கு எனது வீரவணக்கங்கள்.10 04 2004 வெருகல் படுகொலை நினைவுநாள்,புலிகளின் வரலாற்றை புரட்டிபோட்ட நாள், கருணா அம்மானும் கிழக்கு போராளிகளும் இல்லாத ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாகவே இருந்தன, எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் தேனிலவு கொண்டாடத் தெரிந்த புலிகளுக்கு தமது சொந்த போராளிகளுடன், ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேசத்தெரிந்திருக்கவில்லை.
சித்திரவதையின் உச்சம்
இந்த புகைப்படத்தைப் பார்த்தவு டன் இதயத்தில் இனம் தெரியாத வலி. அதன் பின்னணியை வாசித்த போது இதயம் கண்ணீர் விட்டு அழுதது….படத்தில் உள்ள இவரின் பெயர் மன்சூர் ஷஹாதீத், பலஸ்தீன முஸ்லீம். 17 வருடங்கள் இஸ்ரேலிய சிறைச் சாலையில் கடும் சித்திரவதைக் கும், பலவந்த தனிமைபடுத்தலுக் கும் ஆளாகியதால் மனநிலை பாதிக்கவைக்கப்பட்டவர். இஸ்ரேலிய இனவாத சக்தியின் கொடூர கொடுமைப்படுத்தல் காரணமாக மனநிலை பாதிக்கப் பட்ட நிலையில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
‘எல்லைச் சண்டைகளில் 100 பேர் கொல்லப்பட்டனர்’
இளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசிய கட்சிகள், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம், அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்குப் பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு, உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில், தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, இதற்கான பதில்களை நான் வழங்க வேண்டியிருந்தது.