இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
Author: ஆசிரியர்
திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்
எதிர்கால சந்ததியினர் மீது திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்
ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை நிகழத்தான் செய்யும். அதில் பெரும்பாலானவை இயற்கையாகவே இடம்பெறும்; வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்படும் எதிர்வினைகள் பலவாகும். அவற்றைத் தடுத்து நிறுத்துவதென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. ஏனெனில், அவ்வாறான செயல்களில் பலவற்றுக்குப் பின்னால், அரசியல் ஒழிந்தே இருக்கிறது.
இந்திய மீனவர்கள் 20 பேர் இரணைத்தீவில் கைது
கிளிநொச்சி – இரணைத்தீவு கடற்பரப்பில், நேற்றிரவு (24), இரண்டு றோலர் படகுகளில் வருகைதந்திருந்த 20 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே, கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று (25) ஒப்படைக்கப்படுள்ளனர்.
’சிறுபோகத்தில் விதை நெல் உற்பத்தியில் ஈடுபடுங்கள்’
காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்’
5 நாள்களின் பின்னர் ஆய்வு செய்யும் அதிகாரசபை
பசறையில் கடந்த 20ஆம் திகதி பஸ் விபத்து இடம்பெற்ற வீதியை, இன்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த வீதியில் சரிந்துள்ள பாறையை அகற்றுவது தொடர்பில், அதனை சூழவுள்ள இடங்களை பரிசோதிக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மீனவர்களால் மாபெரும் முற்றுகைப் போராட்டம்
கடற்றொழில் அமைச்சரின் யாழ். மாவட்ட அலுவலகத்தை முடக்கி, வடக்கு மாகாண மீனவர்களால், நாளை (26) முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையின் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழரசுக் கட்சி ஏன் இப்படிச் செயல்பட்டு வருகிறது?
(Maniam Shanmugam)
தமிழரசுக் கட்சி 1949இல் உருவான கட்சி. அன்றிலிருந்து இன்றுவரை அக்கட்சியே தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியாக இருந்து வருகிறது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு அக்கட்சிக்கு தொடர்ந்து இருந்தும் அது இதுவரை தமிழ் மக்களுக்காக என்னத்தைச் சாதித்தது என்றால் பதில் “பூஜ்யம்” என்பதாகத்தான் இருக்கும்.
ஜெனீவாவும் இறைமையும்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, நேற்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர் அது, நேற்று முன்தினம், அதாவது திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.
யாழ். மரக்கறி சந்தை தொகுதிக்குப் பூட்டு
யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதி, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.