யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார்.
Author: ஆசிரியர்
பஸ்-ரயில் விபத்து: சந்தேகநபர்களுக்கு மறியல்
தலைமன்னார் – பியர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம் தனியார் பஸ், ரயில் மோதி ஏற்பட்ட விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக விஞ்ஞாபனங்கள் கவர்ந்திழுத்த இலங்கை
பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா
’அரசாங்கம் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை’
தலைமன்னார் விபத்தில் 23 பேர் காயம்
என் தம்பியின் மரணம்
(Gnanasakthy Sritharan)
1987 மார்ச் 16 பேரிடியாக பேரதிர்ச்சியாய் வந்த செய்தி என் தம்பியின் மரணம். இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக. அவன் அக்காலத்தில் முல்லைத்தீவு தேவி புரத்தில் ஈழப்புரட்சி அமைப்பில் செயற்பட்டான் எம்மைப்பொறுத்தவரை அவரது உடலையோ அவர்தொடர்பான வேறு எந்த ஆதாரங்களையோ நாம் பெறமுடியவில்லை.
வல்லாதிக்க நாடுகளின் புதிய ஆயுதம்!
(Maniam Shanmugam)
மேற்குலக நாடுகள் தமது உலக ஆதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதற்காக புதிய புதிய ஆயுதங்களைக் கண்டு பிடித்து வருவதில் சமர்த்தானவை. இப்பொழுது அவை கண்டு பிடித்திருக்கும் ஆயுதம் கொவிட் – 19இற்கு எதிரான தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி இந்த ஆதிக்க நாடுகளால் கொவிட்டுக்கு எதிராக மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. புள்ளி விபரங்களைப் பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும்
சட்டசபை தேர்தலில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அசாம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை தழுவும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
கோபானியின் புதல்விகள்: வீரம்மிகு பெண்களின் கதைகள்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
பெண்விடுதலையை, சமூக விடுதலையின் கூறாகவும் சமூக மாற்றத்தின் தவிர்க்கவியலாத அம்சமாகவும் காணுவது அடிப்படையானது. பெண் ஒடுக்கு முறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையைத் தரும் களங்கள், எம்முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் நிறையவே உண்டு.