இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர்களில், மேலும் 395 பேர் பூரண குணமடைந்து இன்று(14) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,648 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை, ’சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுகோள்’

மட்டக்களப்பு விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியுடன் மோடி இன்று கலந்துரையாடியுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசியில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 250 நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுத் திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 84 ஆயிரத்து 253 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் மேலும் 179 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புர்காவைத் தடைசெய்வதற்கான ஆணையில் கைச்சாத்திட்ட அமைச்சர்

இலங்கையில் புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில், தான் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தீ விபத்து; 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் – சென்னை விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார். அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 351 பேர் இன்று(11) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 83,561 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 2,609 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம்’

மஸ்கெலியா, சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், நேற்று (10) பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு, தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம் என, தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நேரு கருணாகரன் தெரிவித்தார்.

200க்கும் குறைவான பாடசாலைகள் மூடப்படும்

200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக, தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தைப் போன்று பௌதிக மற்றும் மனித வளம் தொடர்பில் நிலவும் முறன்பாடுகள் இதற்கு காரணமாகும் என்று அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.