தனது மகனின் தோலானது எவ்வளவு கறுப்பாக இருக்கும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களால், தனது மகன் ஆர்ச்சியை இளவரசராக்க பிரித்தானிய அரச குடும்பம் மறுத்ததாக, இளவரசர் ஹரியின் மனைவி மேர்கன் மார்க்கிள் தெரிவித்துள்ளார்.
Author: ஆசிரியர்
இரத்தக்களரி ஏற்படுத்தும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!
(Maniam Shanmugam)
இலங்கையில் ‘பாரதீய ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை சில தமிழர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் கட்சியின் ஊடக மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சியைத் தொடங்கியவர்கள் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள் அல்லவென்றும், கொழும்பை வதிவிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்பவர்கள் என்றும் தெரிய வருகிறது. அத்துடன் இது இலங்கையிலுள்ள அனைத்து இனங்களுக்கான கட்சி அல்லவென்றும் தெரிய வருகிறது.
சர்வதேச மகளிர் தினம்
அலெக்சாண்டிரா கொலேண்டை (Alexandra Kollontai):
(Maniam Shanmugam)
அலெக்சாண்டிரா கொலேண்டை (Alexandra Kollontai):
லெனின் அமைச்சரவையில் இருந்த ஒரே பெண்!
1917இல் ரஸ்யாவில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நடந்து, லெனின் தலைமையில் புதிய சோவியத் அரசாங்கம் அமைந்தபோது, அலெக்சாண்டிரா கொலேண்டை என்ற பெண் ஒருவரும் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் ரஸ்யாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதுமிருந்த விரல் விட்டெண்ணக்கூடிய பெண் அமைச்சர்களில் அவரும் ஒருவர் எனக் கூறலாம்.
ஸ்டாலின் – திருமா கையெழுத்து; திமுக-விசிக தொகுதி உடன்பாடு
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தை சுமுகமாக ஆரம்பித்து திடீரென இழுபறியானது. திமுக தரப்பில் பிடிவாதமாக தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள கூறியதும், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக்கொண்டதும் இழுபறிக்கு காரணமானது.