இரணைத்தீவில் இருவேறு இடங்களில் போராட்டம்

இரணைத்தீவு பகுதியில், கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரணைத்தீவு பகுதியில் இருவேறு இடங்களில் இன்று (04) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்திரா காந்தி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தியது நிச்சயமாக தவறானது என காங்கிரஸ் எம்.பி.யும் இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசுவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

உங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவேன்.

உங்களின் உரிமைகளுக்காக நான் போராடுவேன். ஒவ்வொரு மன்றத்திலும் உங்களுக்காக குரல் கொடுப்பேன் என காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொழிலாளர்கள் மத்தியில் உரையாடியுள்ளார்.

இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 205 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 75ஆக அதிகரித்துள்ளது.

செங்கை ஆழியான்

(Manikkavasagar Vaitialingam)

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்.

தமிழ் நாடு: அரசியல் களம்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றிலிருந்து 475  பேர் இன்று(01) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 79,422 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 3,349 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

1,000 ரூபாய்க்கு இணக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளாந்த சம்பளமாக, 1,000 ரூபாயை வழங்குவதற்கு, சம்பள நிர்ணய சபையுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், 900 ரூபாயை அடிப்படை சம்பளமாகவும் 100 ரூபாயையு பட்ஜெட் கொடுப்பனவாகவும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோழர் தா. பாண்டியன் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்…

(சாகரன்)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது(டேவிட்) – நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர்.