முதலில் பதிலளிக்கப்பட்டது: ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக எதெல்லாம் நடந்திருக்காது ? ‘ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஜெயிலில் இருந்திருப்பார்’ அதை விட்டுத்தள்ளுங்கள் ஒருவேளை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்திருந்தால் கடந்த ஓராண்டில்,
Author: ஆசிரியர்
இலங்கை விடயத்தில் சீனா
இப்பொழுது மட்டுமல்ல, எப்போதும் இலங்கையில் சீனா, இன ரீதியாக யாரோடும் எந்தத் தரப்புகளோடும் உறவாடல்களை வைத்துக் கொண்டதல்ல. அரசியல் விவகாரங்களைக் கையாண்டதுமில்லை.
சீனாவினுடைய அரசியலும் அணுகுமுறையும் வேறு. அது நீண்ட கால நோக்கில், தன்னுடைய வளர்ச்சிக்கேற்ப விஸ்தரிப்பைச் செய்யும் அடிப்படைகளைக் கொண்டது. அதற்கமைய விடயங்களைக் கையாள்வது. இதற்குள் சில நாடுகள் தாமாகவே சிக்கிக் கொள்வதுண்டு. சிலவற்றைச் சீனா மடக்கிப் பிடிப்பதுண்டு. இலங்கையில் முதலாவது வகையான தானாகவே சிக்கிக் கொண்ட நிலைமையே நடந்து கொண்டிருக்கிறது.
சீனாவிடமிருந்து இந்தியாவின் கைகளுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திட்டம்!
யாழ். விமான நிலைய மேம்பாடுகள்: மீண்டும் பேச்சுவார்த்தை
யாழ்ப்பாணம் விமான நிலைய மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து இந்தியா-இலங்கை இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்தவாரமளவில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது, விமான நிலையத்தின் வளர்ச்சியில் இந்திய முதலீடு, இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழரின் சாதி வகைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை வடிவங்களும்!
சாதி அமைப்பு என்ற கொடூரமான சமூகக் கட்டமைப்பு இன்றுவரை இலங்கையின் வட பகுதியில் பல நூற்றாண்டுகளாக இறுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகின்றது. இதைத் தகர்ப்பதற்கு காலத்துக்குக் காலம் ஒடுக்கப்படும் சமூகங்கங்களாலும், முற்போக்கு சக்திகளாலும் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், தமிழ் சமூகத்திலும் உலகிலும் பல சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், 30 வருடங்களாக தமிழ் தேசியத்தை நிலைநாட்ட போர் நடைபெற்ற போதிலும், ஒரு சில சிறிய அசைவுகள் ஏற்பட்டதேயொழிய, மாற்றங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப எதுவும் நடைபெறவில்லை.
தோழர் எம்.ஜி.பசீர் எம்மைவிட்டுப் பிரிந்தார்!
தோழர் எம்.ஜி.பசீர் நேற்றைய தினம் (பெப்.12) புத்தளம் வைத்தியசாலையில் காலமாகி, இன்றைய தினம் நல்லடக்கம் செய்த துயரமான செய்தி வந்திருக்கிறது.தோழர் பசீர் யாழ்ப்பாண முஸ்லீம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். 1990 ஒக்டோரில் புலிகள் வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை வெறுமனே 2 மணித்தியால முன் அறிவித்தலில் வடக்கிலிருந்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு செய்தபோது தனது மக்களுடன் சேர்ந்து வெளியேறி அவர்களைப் போலவே மன உளைச்சலுடன் அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்.
இந்த நூற்றாண்டின் சாதனைப் படம் த்ரிஷ்யம்..!
ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்
இலங்கை: கொரனா நிலவரம்
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (13) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 74,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 67,831 பேர் குணமடைந்துள்ளனர். அதன் பிரகாரம், 6 ,269 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 384 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.