இலங்கை: கொரோனா விபரம்

நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. இன்று 740 பேர் குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு தவிசாளர் விஜயம்

உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ரட்நாயக் மற்றும் உறுப்பினர் விவுசன் தலைமையிலான குழு, கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு நேற்று (07) விஜயம் மேற்கொண்டது.

அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயை வழங்க தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது.

பாஜகவுக்கு தலைவலியாக பத்றுதீன் அஜ்மல் திருப்பம்

அசாமில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான பத்றுதீன் அஜ்மல் பாஜகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறார்.

சுவாமி ஞானப்பிரகாசரின் மறுபக்கம்

(Maniam Shanmugam)

யாழ்ப்பாணத் தமிழர்களின் புனித பூமியான நல்லூர் இரண்டு பெரியார்களை தமிழுக்கு அளித்தது என நம்மவர்கள் பெருமை பேசுவதுண்டு. அவர்களில் ஒருவர் ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 – 1879 டிசம்பர் 05). அவரது இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை.

பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் – நடந்தது என்ன?

பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.

முல்லையின் எதிர்காலம் தொடருக்கு விண்ணப்பம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால், முல்லையின் எதிர்காலம் எனும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், புதுக்குடியிருப்பு, விசுவமடு ஆகிய பிரசித்திபெற்ற இடங்களை மய்யப்படுத்தி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

‛ஸ்விட்ச் டில்லி’ திட்டத்துக்கு கமல் பாராட்டு

அரசு பயன்பாட்டுக்கான வாகனங்களை, இலத்திரனியல் வாகனமாக மாற்றுவதோடு, இலத்திரனியல் வாகனம் வாங்குவோருக்கு, மானியம் அறிவித்த, டில்லி முதல்வரின், ‘ஸ்விட்ச் டில்லி’ திட்டத்துக்கு, கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தால் பா.ஜ.,வுக்கு பாதிப்பு?

‘வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால், உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படலாம்’ என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விவசாயிகளின் போராட்டத்துக்கு, இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்

‘அமைதியான முறையில் விவசாயிகள் போராடுவதற்கு, இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என, அமெரிக்க பாராளுமன்ற இந்தியாவுக்கான குழு வலியுறுத்தியுள்ளது.