(Maniam Shanmugam)
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக ‘தமிழ் பல்கலைக் கழக இயக்கம்’ என்ற பெயரில் 1956 ஆனி மாதம் ஒரு இயக்கம் அமைக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இலங்கைத் தமிழர்கள் மத்தியிலிருந்த மிகப்பெரும் படிப்பாளிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த இயக்கம் குறித்து பேராசிரியர் ஆ.வி.மயில்வாகனம் 06 – 08 – 1957 அன்று 18 பக்க கைநூல் ஒன்றை “இலங்கைவாழ் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் – இயக்கம் ஆரம்பித்த வரலாறு” என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். அந்தக் கையேட்டில் இயக்கத்தில் பதவி வகித்தவர்களின் பெயர்களையும் தந்திருக்கிறார். அவர்களின் விபரம் கீழே உள்ளது.
பதவிப் பொறுப்பாளர்கள் விபரம்:
தலைவர்:
சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமி (பிரித்தானியர் காலத்து முன்னாள் சட்டசபை சபாநாயகர்)
உப தலைவர்கள்:
சி.சி.ஏ. பிறிற்ரோ (ஓய்வுபெற்ற சட்டக் கல்லூரி அதிபர்)
பேராசிரியர் பி.கே.சண்முகம் (உடற்கூற்றியல் பேராசிரியர், இலங்கை பல்கலைக்கழகம்)
ஆர்ஆர். குறோசெற் – தம்பையா (முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல்)
பேராசிரியர் சி.ஜே. எலிஸேர் (கணிதப் பேராசிரியர், இலங்கை பல்கலைக்கழகம்)
பேராசிரியர் கே.கணபதிப்பிள்ளை (தமிழ் பேராசிரியர், இலங்கை பல்கலைக் கழகம்)
எம்.எம்.ஐ. காரியப்பர் (மாவட்ட நீதிபதி, குருணாகல)
வணக்.சபாபதி குலேந்திரன் (தென்னிந்திய திருச்சபை ஆயர், யாழ்ப்பாணம்)
பேராசிரியர் ஏ.வி. மயில்வாகனம் (பௌதிகவியல் பேராசிரியர், இலங்கை பல்கலைக்கழகம்)
பேராசிரியர் ஏ.சின்னத்தம்பி (பிரசவ மற்றும் மகளிர் நோய் பேராசிரியர், இலங்கை பல்கலைக்கழகம்)
பி. ஸ்ரீ ஸ்கந்தராஜா (மாவட்ட நீதிபதி, யாழ்ப்பாணம்)
டாக்டர் எஸ். சுப்பிரமணியம் ( முன்னாள் மாகாண சத்திரசிகிச்சை நிபுணர், யாழ்ப்பாணம்)
அருட்தந்தை எக்ஸ்.எஸ். தனிநாயகம்
எம். திருச்செல்வம் (பிரதி சொலிசிட்டர் ஜெனரல்)
ஜே. தியாகராஜா (சட்டத்தரணி)
எஸ்.பி. வைத்திலிங்கம் (சொத்துகள் திட்டமிடுனர்)
பொதுச்சபை உறுப்பினர்கள்:
டாக்டர் சி. அமிர்தலிங்கம் (முன்னாள் மாவட்ட கடற்தொழில் பணிப்பாளர்)
சி. ஐயாத்துரை (சட்டத்தரணி, வவுனியா)
எஸ். ஆறுமுகம் (நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்)
டாக்டர் வி.அப்பாப்பிள்ளை (பௌதீகவியல் வாசிப்பாளர், இலங்கை பல்கலைக்கழகம்)
சி.எஸ். பார் – குமாரகுலசிங்கி (அட்வகேட், கொழும்பு)
ஆர். கனகராஜர் (தலைமை பொறியாளரும், முகாமையாளரும், மாநகர சபை ட்ராம் சேவைகள்)
கே.ரி. சிற்றம்பலம் (சட்டத்தரணி)
எஸ்.குமாரசாமி
டாக்டர் ஏ.ஏ. ஹ_வர்
திருமதி சரோஜினி கதிர்காமர்
கப்டன் சி.ஏ. கனகசிங்கம் (சட்டத்தரணி, திரிகோணமலை)
என். கிருஸ்ணதாசன் (மாவட்ட நீதிபதி, காலி)
பேராசிரியர் கே. குலரத்தினம்
டாக்டர் பி. மகாதேவன் (கால்நடை ஆராய்ச்சி உத்தியோகத்தர், விவசாயத் திணைக்களம்)
வி. மாணிக்கவாசகர் (மாவட்ட நீதிபதி, கொழும்பு)
என். மாணிக்க இடைக்காடர்
கே. மதியாபரணம் (வர்த்தகர், கொழும்பு)
டாக்டர் எஸ். வித்தியானந்தன் (தமிழ் விரிவுரையாளர், இலங்கை பல்கலைக்கழகம்)
ஏ. மேர்ஸா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கல்முனை)
டபிள்யு. ஒலிகசக்ரம் (அட்வகேட், மட்டக்களப்பு)
பேராசிரியர் ஆர்.எச். போல் (மின் பொறியியல் பேராசிரியர், இலங்கை பல்கலைக்கழகம்)
ஏ. பெருமையினார் ( காரியாதிகாரி, யாழ்ப்பாணம்)
எஸ். இராஜநாயகம் (தலைமை தொலைத்தொடர்பு பொறியாளர்)
ஈ.ஏ. இராஜசிங்கம் (இலங்கை போக்குவரத்து சபை உறுப்பினர்)
எம். இராஜேந்திரா
சி. ரங்கநாதன் (அட்வகேட், கொழும்பு)
சி. இராசையா
டாக்டர் டபிள்யு.ஈ. ரட்ணவேல் (வைத்திய ஆராய்ச்சியாளர்)
ஜே.எம். சபாரட்ணம் ( காரியாதிகாரி, கல்முனை)
எஸ். சிற்றம்பலம்
பேராசிரியர் வி. சிவலிங்கம் (ஒட்டுண்ணித்துறைப் பேராசிரியர், இலங்கை பல்கலைக்கழகம்)
கே.வி.எம். சுப்பிரமணியம் (சட்டத்தரணி, மட்டக்களப்பு)
டாக்டர் ஏ. சுந்தரலிங்கம்
ஜி.பி. தம்பையா
கே. தர்மரட்ணம் (புள்ளிவிபரவியலாளர், வர்த்தகத் திணைக்களம்)
டாக்டர் எஸ். திருநாவுக்கரசு (சுகாதார சேவைகள் திணைக்களம்)
சேர். கந்தையா வைத்தியநாதன்
பொதுச் செயலாளர்:
ரி. இராஜதுரை (அட்வகேட்)
உதவிச் செயலாளர்கள்:
ஆர். இராஜரட்ணம் (உணவுற்பத்தி உதவிப் பணிப்பாளர்)
எம். இராமசாமி
பொருளாளர்:
ரி.எஸ். முத்துலிங்கசுவாமி ( நகர கிளை முகாமையாளர், இலங்கை வங்கி)
உதவி பொருளாளர்கள்:
ஈ.எஸ். தேவசகாயம்
சி. கந்தசாமி (கொழும்பு மாநகர சபை பொறியாளர்)
கணக்கு மேற்பார்வையாளர்:
கே.சச்சிதானந்தா
ஏறத்தாள 60 வரையான உயர் கல்வியும் பதவியும் பெற்ற ‘கல்விமான்கள்’ 18 வருடங்களாக தலையால் மண் கிண்டியும் தமிழ் பிரதேசங்களில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ முடியவில்லை.
இறுதியில் 1974 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசுதான் யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்துக் கொடுத்தது.
இவர்களின் இந்தக் கையாலாகாத்தனம்தான் தமிழ் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனத்துக்கும் அச்சொட்டாகப் பொருந்துகிறது.