சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் இவ்வாரத்துக்கள் அனுமதி கிடைக்கும் என, மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவசர பாவனைக்காக, இந்தத் தடுப்பூசியைப் பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Author: ஆசிரியர்
‘தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம்’
பெருந்தோட்ட மக்களுக்கு இடவசதிகளை கொண்ட வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, இந்திய அரசாங்கமும் இந்த வீட்டுத் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளது என்றார்.
’தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்’
பீ .1.258 பரம்பரையின் மாறி இலங்கையில் உள்ளது
பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்ஸலாந்து ஆகிய நாடுகளில் பரவிய மாறி (திரிபடைந்த) கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன உறுதியாக தெரிவித்துள்ளார். கொவிட் -19 (பீ .1.258 பரம்பரை) இன் புதிய மாறுபாடு, அதிக பரிமாற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.