கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் இன்று (23) கைது செய்துள்ளனர். குச்சவெளி, மதுரங்குடா -செந்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பவித்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி, மேலும் 353 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் மேலும் 353 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதனால் 57 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளதாகவும், 49 ஆயிரத்து 261 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேனி இணையத்தள ஆசிரியர் ஜெமினி எம் விட்டுப் பிரிந்தார்

மாற்றுக் கருத்தாளர்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்த தேனி இணையத் தள ஆசிரியர் ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் கொரனா காலகட்டதில் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டிருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்தார்.

பண்பாட்டு ஆக்கிரமிப்பின் இன்னோர் அத்தியாயம்: குருந்தூர் மலையமர்ந்த கௌதமர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஈழத்தமிழரின் இருப்புக்கான போராட்டம், இன்று உள்ளூர் களங்களிலேயே அரங்கேறுகிறது. எமது உரிமைகளுக்கானதும் இருப்புக்கானதுமான போராட்டத்தின் மையப்புள்ளி எமது வாழ்விடங்களே ஆகும்.

வெடுக்குநாறி கோவில் நிர்வாகத்தினரும் பூசகரும் மறியலில்

வவுனியா நீதிமன்றால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், இன்று ஆஜராகியிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி பணிப்பு

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும், மேய்ச்சல் தரையைப் பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

’இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினர்’

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

காரைதீவில் கொரோனா; 105 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

காரைதீவில் முதற்தடவையாக மாணவர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவர்களோடு தொடர்பிலிருந்த மூன்று வகுப்புகளில் கற்கும் 105 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

16 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அஙகிகாரம்  வழங்கியுள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் தொடர் முயற்சியால் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த வருடம் கல்வி அமைச்சரிடம் இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

லெனின்

(Rathan Chandrasekar)

சோவியத் யூனியன் வீழ்ந்தபோது
பல இடங்களில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. நொறுக்கப்பட்டன.
அப்படி தஜிகிஸ்தானிலும் ஷாரிடஸ் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மாகாணத்தின் மிக உயரமான சிலை வீழ்த்தப்பட்டது.