உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் – 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
Author: ஆசிரியர்
’எக்ஸ்’ சமூக தளத்துக்கு தடை விதித்த பிரேசில்
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு
இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று தெரிவித்துள்ளது. வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எம்.எ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேந்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் தமது கட்சியைச் சேர்ந்த அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும் தீர்மானித்ததோடு இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மூன்று தீர்மானங்களை இன்று நிறைவேற்றியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலா? சர்வஜன வாக்கெடுப்பா?
(எம்.எஸ்.எம்.ஐயூப்)
கடந்த வாரம் நாம் ஆராய்ந்த விடயத்தின் தொடரச்சியாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபப்டவிருக்கும் நிலையில், அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியினதோ அல்லது பாராளுமன்றத்தினதோ பதவிக் காலத்தை நீடிப்பதோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காக அரசாங்கம் அரசியலமைப்பை திருத்த அவசரப்படுவது ஏன்?
வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான நீதி?
(மொஹமட் பாதுஷா)
நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற அநியாயங்களுக்கான, மனித உரிமை மீறல்களுக்கான நீதி நிலைநாட்டுதல் பற்றியே வருடக் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இனப் பிரச்சினை தீர்வு கோரிக்கைகளும் அரசியல் முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
காத்தாடியாகி மரணிக்கும் ‘குஷ்’ க்கள்
உணவுத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் கொரோனா காலத்தில் மரக்கறிகளை தேடி வீடுகளில்இருந்து வெளியேறாமல் இருப்பதற்காகவும், வீட்டுத் தோட்டக்கலையை அரசாங்கம் ஊக்குவித்தது. அதில், தங்களை அர்ப்பணித்தவர்கள், இன்னும் பயிரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். பலரும் கைவிட்டுவிட்டனர். எனினும், மரக்கறிகளின் விலை உயரும் போது ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்பதற்கு இணங்க மண்ணை பதப்படுத்துவர்.